என் மலர்
நீங்கள் தேடியது "Attack"
- டோனி தாஸ் சுந்தராபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
- இவர் தனது நண்பர்களுடன் ஜவுளி எடுப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்தனர்.
குனியமுத்தூர்,
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் டோனி தாஸ் (22). இவர் சுந்தராபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருடைய நண்பர்கள் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த ஆகாஷ் (23)சதீஷ் (21).
நேற்று 3 பேரும் ஜவுளி எடுப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்தனர். துணி எடுத்துவிட்டு சுந்தராபுரம் நோக்கி பஸ்ஸில் வந்தனர்.
அப்போது பஸ்சில் வந்து கொண்டிருக்கும் போது, கேரளாவில் தான் நல்ல கலெக்ஷன்ஸ் உள்ளது. கோவையில் எதுவுமே சரியாக இல்லை என்று டோனிதாஸ் தெரிவித்தார். அதற்கு ஆகாஷ், சதீஷ் இருவரும் சேர்ந்து கோவையில் தான் நல்ல கலெக்ஷன்ஸ் உள்ளது என்றனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆகாஷ், சதீஷ் இருவரும் சேர்ந்து டோனிதாமசை தாக்கினர்.
இதில் கை,கால், முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசர் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ், சதீஷ் 2 பேரையும் கைது செய்தனர்.
- பீரங்கிகள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதாக தென்கொரியா புகார்.
- அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல்.
சியோல்:
அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரியா எல்லைகளை குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரியா ராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தென் கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மணிகண்டன் (வயது 24). சென்னை அடையாறு சத்யா நகரில் கட்டிட மேஸ்திரியாக உள்ள இவரிடம் ஆத்துவாம்பாடி ஜோதி நகர கொல்லமேட்டில் வசிக்கும் பூங்காவனம் மகன் தங்கதுரை (36) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மணிகண்டனிடம் தங்கதுரை ரூ. 5 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். பின்னர் தங்கதுரை தனது ஊருக்கு வந்து பசுபதி என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இதனிடையே மணிகண்டன் கடந்த 4-ந் தேதி தனது ஊரில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, தங்க துரையுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது தங்கதுரை, மணிகண்டனிடம் கொடுத்த பணத்தை கேட்பாயா? என தகராறு செய்து விறகு கட்டை யால் அடித்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இதில் படு காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள் ளார். இது குறித்து அவரது தந்தை சிவக்குமார், தனது மகனை 'கொலை செய்ய முயற்சி செய்து தங்கதுரை தாக்கியுள்ளார் என போளூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப் பன் ஆகியோர் தங்கதுரை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
- சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பால சுப்பிரமணியனுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இதையடுத்து இசக்கி சர்வேயர் மூலம் இடத்தை அளந்து வேலி அமைத்துள்ளார். சம்பவத் தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர். இதைப்பார்த்த இசக்கி தட்டிக் கேட்டார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பார்வதி உள்பட 5 பேரும் சேர்ந்து இசக்கியை செங்கல்களாலும், கம்பாலும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுகுறித்து மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக பாலசுப்பிர மணியன், அவரது மனைவி பார்வதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்கு ளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது19). கார் டிரைவர்.
- இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்னவநேரியை சேர்ந்த லிங்கபெருமாளிடம் ரூ 5,500 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்கு ளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது19). கார் டிரைவர்.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்னவநேரியை சேர்ந்த லிங்கபெருமாளிடம் ரூ 5,500 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவில் முத்துகிருஷ்ணன், கூந்தன்குளம் அருகே சென்ற போது, அங்கு வந்த லிங்கபெருமாள் அவரை தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்று விட்டார்.
இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து லிங்க பெருமாளை தேடி வருகின்றனர்.
- புதியம்புத்தூர் அருகே உள்ள பச்சை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி சரஸ்வதி(வயது 57).
- நிலத் தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுப்படி சரஸ்வதி தன் நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்துள்ளார்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் அருகே உள்ள பச்சை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி சரஸ்வதி(வயது 57).
அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி மகன்கள் ஞான ராஜ் என்ற பிரபாகரன் (48), சந்திரசேகர் (43) ஆகியோருக்கும் சரஸ்வதிக்கும் நிலத் தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுப்படி சரஸ்வதி தன் நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்துள்ளார். இதனால் ஞானராஜ் என்ற பிரபாகரன், சந்திரசேகர் ஆகியோர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சரஸ்வதி, செல்வராஜ் இருவரையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
- விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் மெலட்டூர், பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
நரியனூர் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் உள்ளது. தற்போது மஞ்சள் நோய் எனப்படும் புதிய வகை நோய் தாக்குதல் காரணமாக சம்பா பயிர்கள் நுனிசிவந்து பயிர்கள் கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
எனவே, மஞ்சள் நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற அரசு வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள்.கூலி வேலை செய்து வருகிறார்.
- இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது65). இவரது கணவர் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ராஜம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவில் ராஜம்மாளின் மகன் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்காக மேலகட்டளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அலங்காரப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வின், ஜானை பார்த்து ஆலயத்தை அலங்காரப்படுத்த நீங்கள் யார்? எனக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வின், ஜானை தாக்கினார். இதைப்பார்த்த ராஜம்மாள் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய செல்வினை தேடி வருகின்றனர்.
- ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது
- குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய 2 பேரும் மது குடிக்க வந்தனர்.
அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பார் ஊழியர் சேர்மன்ராஜ்(28) கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்தனர். அவர்கள் பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி பாரில் இருந்த டேபிள் மற்றும் சேர்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
மேலும் பார் ஊழியர் சேர்மன்ராஜை பீர்பாட்டிலால் தாக்கினர். இதனை மற்ற ஊழியர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் அந்த கும்பல் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய தொழிலாளி ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார்(23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன்(31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.