என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "audio launch"
- எல்லாருக்கும் ரஜினி சார் படத்துல ஒரு ஸ்டைல் மற்றும் சீன் பிடிக்கும்.
- எனக்கு படையப்பா ஊஞ்சல் சீன் தான் ரொம்ப பிடிக்கும் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஞானவேல் பேசியதாவது:
ஜெய்பீம் பட வாய்ப்பு கொடுத்த சூர்யா சாருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நான் இப்போது நின்றுகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் சூர்யாதான்.
எல்லாருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல் மற்றும் காட்சி பிடிக்கும் எனக்கு படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் சீன் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதினேன்
தலைவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தன்.
அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் செட்டில் இருக்கிறாரோ, நான் அதற்கு முன்பாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி எனக்கு கொடுத்த முதல் அறிவுரை. ஆனால் என்னால் அதை செய்யவே முடியவில்லை. காரணம் அமிதாப் பச்சன் கேரவனுக்கு செல்லவே மாட்டார். எப்போதுமே ரஜினி வருவதற்கு முன்பே அவர் செட்டுக்கு வர விரும்புவார். இரு சூப்பர் ஸ்டார்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது.
ரஜினி சார் எனக்கு கிடைச்ச கோல்டன் விசா என தெரிவித்தார்.
- சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.
- அமிதாப் டப்பிங் எல்லாம் செய்து படிப்படியாக கடின உழைப்பால் மிக பெரிய ஸ்டாராக உயர்ந்தார் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது:
நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது... படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குனர் ஞானவேலு கிட்ட சொன்னேன்..
சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது. இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.
இந்த படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன் என தெரிவித்தார்.
- வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியானது.
- வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை:
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அனிருத், வக்கீல் சார்... ஆண்டவன் கோர்ட்ன்ணு ஒன்னு இருக்கு.. அங்க இந்த அண்ணாமலை ஜெயிப்பான்.. இது அந்த திருவண்ணாமலை சிவன் மேல சத்தியம் என பஞ்ச் டயலாக் பேசி அசத்தினார்.
மேலும், நான் தலைவருடன் 4 படம் ஒர்க் பன்னிருக்கேன். இது என்னுடைய 34-வது படம். இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்லை. தலைவர் இந்த மாதிரி படம் பண்ணினது சினிமாவுக்கு ரொம்ப நல்லது.
நிறைய படத்தோட இசை வெளியீட்டு விழாவில் கலந்துருக்கேன். ஆனா, எந்தப் படத்துக்கும் ரஜினி சார் படம் போல கூட்டத்தையும், விசில் சத்தத்தையும் பார்த்தது கேட்டது இல்லை என தெரிவித்தார்.
- போலி டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் அரங்கிற்குள் சென்றதாக புகார்.
- ரசிகர்கள் போலீசாருகடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் போலி டிக்கெட்டுடன் ரசிகர்கள் வந்ததால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
போலி டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு நிறைய பேர் அரங்கிற்குள் சென்றதாக புகார் எழுந்துள்ளது. போலி டிக்கெட்டை வைத்து அரங்கிற்குள் சென்றவர்களால், விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் பூட்டு போட்டு பூட்டப்பட்ட நிலையில் டிக்கெட்டுடன் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ரசிகர்கள் போலீசாருகடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
- இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர்.
தனுஷ் அவரது ஐம்பவதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர் ரகுமான், துஷரா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்,
இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். தனுஷ் அவர்களது இன்ஸிபிரேஷன் எனவும் அவரிடம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டோம் என நடிகர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதில் அவர் ஏன் போயஸ் கார்டனில் வீடு வாங்கினார் என்ற காரணத்தை அவர் கூறினார்.
சென்னை: நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தனுச் பதிலளித்துள்ளார்.
`தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன். போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க, நானும் தலைவர் வீட்டை பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம். அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க, அப்படியே வியந்து போய் விட்டேன். இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என தனுஷ் சொல்வதற்கு முன்பாகவே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.
அதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்கிற அளவுக்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் " நான் யாருன்னு எனக்கு தெரியும், ன்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்" என பேசி தனுஷ் அவரை பற்றி தவரான விமர்சனம் வைக்கும் பல நபர்கலின் வாயை அடைத்துள்ளார்.
தனுஷ் பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.
- படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 6) சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ ஆர் ரகுமான், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், "10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சிட்டு துள்ளிக்கிட்டு இருக்கியேன்னு நான் ஒரு டயலாக் சொல்லுவேன். இன்னும் துள்ளிக்கிட்டு தான் இருக்காரு. அவரை பார்த்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இப்போ ஒரு இயக்குனரா இருக்காருன்னு. அசுர வளர்ச்சி. அழகான வளர்ச்சி" என்று கலகலப்பாக பேசி தனுஷை பாராட்டினார்.
துஷாரா விஜயன் பேசுகையில், "ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. நிறைய திட்டு வாங்கி இருக்கேன். இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு" என்று பேசினார்.
காளிதாஸ் ஜெயராம், "நான் தனுஷ் சாரை ஒரு வழிகாட்டியாக பார்க்கிறேன். யாருக்கு தான் தனுஷ் சாரை பிடிக்காது" என்று பேசினார்.
அபர்ணா பாலமுரளி பேசும்போது, "ராயன் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தனுஷ் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்" என்று தெரிவித்தார்.
அடுத்ததாக சந்தீப் கிஷன் பேசும் போது, "தனுஷ் அண்ணாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவர்தான் என் அண்ணா, என்னுடைய வழிகாட்டி. நான் கதை கேட்காமல் நடித்த முதல் படம் இதுதான். தனுஷ் அண்ணா எல்லோருக்கும் பிடித்தவர். அவர் ஒரு நல்ல மனிதர். அனைவருக்கும் அவர் ஒரு அடையாளம். அது வேறு நடிகராக இருந்திருந்தால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம். அது வலுவான கதாபாத்திரம். அதை தனுஷ் அண்ணா எனக்கு கொடுத்தார். லவ் யூ அண்ணா. என்னை நம்பியதற்கு நன்றி" என்று பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார்.
- இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் மோகன் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நேற்று விஜய் அமேரிக்கா சென்றார். இந்நிலையில் படத்தின் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கவுரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த் , வெங்கட் பிரபு மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் நடிக்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
- இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.
வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்