search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "authorities investigating"

    தஞ்சையில் குடோன்களில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜியப்பாவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மானோஜியப்பாவீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    பின்னர் 2 கடைகளின் குடோன்களில் சோதனை நடத்தியபோது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், புகையிலை போன்றவை மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் அருண் கூறியதாவது:-

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அறிக்கை பெறப்பட்டவுடன் கோர்ட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் யாராவது விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளின் உரிமையாளருக்கு அபராதமோ அல்லது கோர்ட்டு மூலம் நடவடிக்கையோ மேற்கொள்ளப்படும் என்றார்.

    மேலும் குடோன்களில் பொருட்களை பதுக்கி வைந்திருந்ததாக வடமாநில வியாபாரிகள் 2 பேரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×