என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto"

    • ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
    • சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபா ண்டியன் (வயது 37).

    இவர் மணக்குடி கடைத்தெரு அருகே சாலை ஓரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்று ள்ளார்.

    அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாரத விதமாக மோதியது.

    இதில் சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தலைஞாயிறு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர்.

    திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியதாக தெரிகிறது.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டிருந்த மினிவேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ முழுவதுமாக சேத மடைந்தது. ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனே அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    • சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
    • காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாடிப்பட்டி

    கோவையில் இருந்து திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வந்தது. அங்கு பழங்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டது.

    மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் இன்று காலை சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புளிநகர் கருப்பு கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார்.

    அப்போது சமயநல்லூரில் இருந்து பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மீனா, மலர்விழி வள்ளியம்மாள் மற்றும் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நகரிக்கு சென்று கொண்டிருந்தது. இதை டிரைவர் முருகன் ஓட்டினார்.

    அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

    இதில் ஆட்டோவின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படு காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோ.
    • வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.19,65,000-ம் இதற்கு மானிய தொகையாக ரூ5,20,500 ஆகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெகடர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தாட்கோ மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி ஊராட்சி சாக்கரமஸ் என்பருக்கு தொழில் முனைவோர் இயக்கத்தின் மூலம் ரூ.2.95,000 மொத்த தொகையில் ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவையும்,

    மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் ஊராட்சி பெரிய தெரு ராஜபாண்டியன் என்பருக்கு ரூ.9,800,000 மொத்த தொகையில் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கோதண்டபுரம் ஊராட்சியை சார்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.6,00,000 மொத்த தொகையில் ரூ.2.07,000 மானியத்துடன் புதிய டிராக்டர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    இவ்வாகனங்களின் மொத்த மதிப்பு மதிப்பு ரூ.19, 65,000 மும் இதற்கு மானிய தொகையாக ரூ5, 20, 500 ஆகும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்

    முத்துசாமி, மானட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியயின் நேர்முக உதனியாளர் (பொது) நரேந்திரன், மாவட்ட தாட்கோ மேலாளர்சுகந்தி பரிமளம்உதவி மேலாளாசுசிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
    • அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னையில் மொபைல் செயலி மூலம் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி உள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கும் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலி மூலம் தற்போது ரேபிடோ பைக் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் இந்த வசதி பிரபலம் ஆகி வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் தனிநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அழைத்துச் செல்வார்.

    இதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிகாலை முதல் இரவு வரை இந்த வசதி கிடைக்கிறது.

    சமீபத்தில் ரேபிடோ வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியது. பெண் பயணிகளை மோட்டார் சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இவர்கள் அழைத்து செல்கின்றனர். ரேபிடோ பைக் வசதி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரேபிடோ பைக் வசதியை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மொபைல் செயலிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் இணைக்கப்பட்டு சவாரி ஏற்றப்படுகிறது. இது மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமானது.

    பயணிகளுக்கு பாதுகாப்பற்றது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதனை ஏற்றுக் கொண்டு பெண்களை பயன்படுத்தி வருவது தவறான முன் உதாரணமாகும். ஆதலால் இதனை தடை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், கமிஷனரிடம் வலியுறுத்தினார்.

    இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் நாளை தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையில் 5 நாட்களுக்குள் 'ரேபிடோ' பைக் வசதியை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • மனைவியின் கையை பிடித்து இழுத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா(வயது26), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பானுபிரியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள்(20) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று முன்தினம் புதுப்பாளையம் மாரி யம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதனை காண்பதற்காக இசக்கிராஜா, அவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மங்காபுரம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(25) என்பவர் பாண்டியம்மாள் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனை இசக்கிராஜா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பைப்பை எடுத்து இசக்கிராஜாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி இசக்கிராஜா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்.

    • ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார் அவரை உடன் சென்றவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு சேர்த்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள என்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பொன்னம்மாள்(வயது72). இவர் நேற்று தாதன்குளம் சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    தாதன்குளத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பொன்னம்மாள் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் அவர் சீட்டின் ஓரத்தில் அமர்ந்ததாக தெரிகிறது.

    ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது பொன்னம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.

    இதனால் விபத்துக்கள் நிகழ்ந்து உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது.
    • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புதிய பஸ் நிலையம் சங்க ஆலோசகர் அண்ணாதுரை வரவேற்றார். ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், சி.ஐ.டி.யூ ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, மாநகரத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் மூர்த்தி, மக்கள் அதிகாரம் தேவா, புதிய பஸ் நிலையம் சங்கம் தலைவர் நாகலிங்கம், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சாமிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாக குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்த கூட்டத்தில், கேரள மாநில அரசை போல் ஆட்டோ செயலியை உருவாக்கி அரசை ஏற்று நடத்த வேண்டும். தஞ்சை பெரிய கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய பஸ் நிலையம் ஆட்டோ சங்கம் கருணாகரன், வழக்கறிஞர் சண்முகநாதன், அனைத்து வாகன ஓட்டுனர் சங்க பேரவை பழனிச்சாமி, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதிய பஸ் நிலையம் ஆலோசகர் குப்புசாமி நன்றி கூறினார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.

    பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.

    பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.

    இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

    • ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
    • இவ்வாறு வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநா தன் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீர் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்தார்.

    • தொழிலாளர் சங்கம் கோரிக்கை
    • பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், ஆட்டோ சங்க மாநில துணைப் பொது செயலாளர் அந்தோணி, பொருளாளர் செந்தில்முருகன், மாநில துணை தலைவர்கள் பாளையத்தான், பிரகாஷ், ஜீவா, நடனமூர்த்தி, மாநில செயலாளர்கள் தேவநாதன்,சதீஷ், ராஜா, சதீஷ்குமார்,

    முருகேசன், நிர்வாக, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்து துறை அறிவித்தபடி ஆட்டோவில் மாணவர்களை குறைவான எண்ணிக்கையில் ஏற்றினால் பள்ளிக்கு செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் 2 மடங்கு ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதுபோல் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு பெற்றோர்க ளிடம் வசூலிக்கப்படும் கட்டணமும் 2 மடங்கு உயர்த்தப்படும். இதனால் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படும். எனவே ஆட்டோவில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 8 பேர் ஏற்றி செல்வதற்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 6 பேர் வரை ஏற்றி செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    பள்ளிக்கு செல்லும் ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்வதால் மாணவர்களை சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே, பள்ளி முடித்து மாலையில் வரும் போது சோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கவும் ,மெட்ரோ ரெயில் விடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகிய சாலையில்  7 மணி முதல் 9 மணி வரை கனரக வாகனத்தில் குப்பையை ஏற்றி செல்வதை தடை விதிக்க வேண்டும்.

    நகர பஸ்களின் நேரத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    ×