என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Avinasi project"
- ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.
- ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
பெருந்துறை:
முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பெருந்துறைக்கு வந்தார். அவருக்கு பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமை ச்சர்கள் கே.ஏ. செங்கோட் டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராம லிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னதாக ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.
அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி பேசியதாவது:-
ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த திட்டம் 6 மாதம் முன்பே முடிந்திருக்க வேண்டும்.
இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டு விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள். திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரி நீர் கடலில் கலக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் நன்றி கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை, கருமாண்டி செல்லி பாளையம் பேரூர் செயலாளர்கள், ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்