என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "awami league"
- மாணவர் பிரிவு கொலை, சித்தரவதையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
- மாணவர்கள் போராட்டத்தின்போது பல்கலைக்கழகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்ட்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்தள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மாளிகை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், வலுக்கட்டாயமாக வங்கதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளியேறுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை உரை நிகழ்த்த விரும்பினார். ஆனால், ராணுவம் அவருக்கு 45 நிமிடம் கால அவகாசம் கொடுத்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
ஷேக் ஹசீனாவின் வங்கதேசம் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு வங்கதேசம் சத்ரா லீக் என்ற பெயரில் இயங்கி வந்தது. போராட்டத்தின்போது கொலைகள், துன்புறுத்தல், சித்திரவதையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம் ஜூலை மாதம் அமைதியாக நடைபெற்றது. சத்ரா லீக் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் நேற்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், இங்குள்ள ரங்கமாட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நேற்று மாலை எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
வங்காளதேசம் நாட்டில் மாவட்ட நிர்வாகங்களுக்கு நேற்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது கோஷ்டி மோதலில் தேர்தல் அதிகாரி உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த குழுவினர் நொய்மேலி பகுதி வழியாக வந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேர்தல் அலுவலர் உள்பட 6 பேர் இறந்தனர்.
இந்நிலையில் வங்காள தேசத்தின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் பிளச்சல்லா பகுதியின் தலைவர் சுரேஷ் கந்தி டான்சங்கியா இன்று காலை குடும்பத்தினருடன் படகில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென படகை மறித்த பயங்கரவாதிகள், சுரேஷின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்