என் மலர்
நீங்கள் தேடியது "awards"
- 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்–விடும் பாரதம் சமூக சேவைக்–குழுவின் ஏற்பாட்டில், மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வரும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப் பள்ளி நாராயண நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தர்மத்தோப்பு-வாசுகி நகர் ஆகிய பள்ளிகளில் செடிகள், மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தளிர்விடும் பாரதம் சமூக சேவைக் குழுவின் தலைவர் சீனிவாசன், செயலாளர் பிரபு வரதராஜன், ஜூவல்லரி செந்தில், மகேந்திரன், செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கெளசல்யமணி, பாரதி, நாகரத்தினம் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது
- மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்திற்கு 14 விருதுகள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் இந்திய மருத்துவ சங்க மாநாடு நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் பணிகளை பாராட்டி 14 விருதுகளை பெரம்பலூர் மருத்துவ சங்கம் சமூக சேவைக்காகமுதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது மேலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியது. தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தது. தமிழக அளவில் சாதனை படைத்த இந்திய மருத்துவ சங்கத்தில் அதிக அளவில் டாக்டர்களை உறுப்பினர்களாக சேர்த்தது மற்றும் சமூக சேவையினையும் பாராட்டியும் 14 விருதுகளை பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருக்கு சென்னையில் நடந்த சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது. இதனை பெரம்பலூர் சங்க நிர்வாகிகளும் மருத்துவர்கள், டாக்டர்கள் வல்லபன், சுதாகர், செங்குட்டுவன், சுமதி செங்குட்டுவன், திருமால், ராஜா முகமது, பகுத்தறிவாளன், கலா, நேரு, ரமேஷ், அன்பரசன்ஆகியோரிடம் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால், செயலாளர் டாக்டர்.தியாகராஜன் முன்னிலையில் 14 விருதுகள் பெரம்பலூர் சங்கத்துக்கு வழங்கினர். முன்னதாக புதிய மாநில மருத்துவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் செந்தமிழ் பாரிக்கு பெரம்பலூர் சங்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது.
- இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப் பட்ட அலுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பங்களை 21-தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுய உதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம், நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் வருகிற 10-ந்தேதி முதல் 21-தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் நரேந்திரன்நாயர் விருது வழங்கினார்.
- சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.
சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் வகையில் விருந்தும், விருதும் வழங்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்ற விழா விற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷ னர்கள், உதவி கமிஷ னர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ-சைவ விருந்து வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்பளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
எனவே விருதுக்கு தகுதியானவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனிதாபிமான செயல்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
- மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துக்கள், மின்கசிவுகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதாபிமான செயல்களுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் பெற தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு பக்க அதற்கான குறிப்புரையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
- விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.
தஞ்சாவூர்:
விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலிராமன் என்ற அரசவை கலைஞர் விகடக்கலையில் சிறந்து விளங்கினார்.
தெனாலிராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம்.
இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த கலைமாமணி குன்னியூர் கல்யாணசுந்தரம் (வயது 80) என்பவர் விகடகலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த கலையை செய்து வருகிறார்.
தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமே விகடக்கலையை இன்றும் சிரிப்பும் சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருகிறார்.
அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் நிகழ்ச்சிகளில் பேசும்போது சமுதாயத்திற்கு சிந்தனை கருத்துக்கள் கூறுவது மட்டும் அல்லாமல், தனது குரலில் பறவைகள், விலங்குகள் போல் மயில், கிளி, குயில், அணில், தவளை, எருமை மாடு, நாய், ரயில், உடுக்கு சத்தம், மோட்டார் இன்ஜின் போன்ற சத்தங்க ளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசிக்க வைப்பார்.
நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார் போல் விகட கலைக்கு போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.
இதுகுறித்து விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம் கூறும்போது, சிறுவயதில் விகடக்கலையை பற்றி தெரிந்து கொண்டு திருவிசநல்லூர் ராமசாமி சாஸ்திரிகளை மானசீக குருவாக ஏற்று தற்போது இந்த கலையை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்கிறேன்.
போதிய வருமானம் இல்லாததால் இந்தக் கலை தற்போது நலிவடைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் பொற்கிழி விருது பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்.
இந்தக் கலையை கவுரவப்படுத்தினால் முன்னாள் விகட கலைஞர் தெனாலிராமனை கவுரவிப்பது போல் இருக்கும் என்றார்.
- சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
- 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
அதன்படி, பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக விளங்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த டூர் ஆப்ரேட்டர், சிறந்த உள்நாட்டு டூர் ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம் என 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலருக்கு 89251 58497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
- சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.
இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.
இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
- பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
- அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலு வலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-
பாரம்பரிய காய்கறிகள்
பாரம்பரிய காய்கறி கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிக ளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பம் செய்ய லாம். பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
தோட்டக்கலைத்துறை இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in/ மற்றும் மாவட்ட அலு வலகங்களில் விவசா யிகளின் இதற்கான விண்ணங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப் பங்களை கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் அல்லது மாவட்ட தோட்டக்கலைத்துறை அலு வலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண்வள மேம்பாடு மற்றும் அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதுக்கு தேர்வு செய்யப் படுவார்கள்.
இதில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட கலெக்டர் அறிவிப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் விழாக்களின் போது இதற்கான சான்றிதழ் மற்றும் வங்கி வரவோலை, விருது வழங்கப்படும். இதில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும் , 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.