என் மலர்
நீங்கள் தேடியது "awareness rally"
- நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.
நெல்லை:
நெல்லை மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியை மாநக ராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம் வழியாக தனியார் கல்லூரியில் முடிவடைந்தது. இதில் கள விளம்பர அலுவலர் ஜீனி ஜேக்கப், விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டேவிட் அப்பாதுரை, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கவுரவிக்க ப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.மேலும் வில்லுப்பாட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
- திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் விநியோகம்
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டம் சார்பில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை கையாள்வது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் அருள் பாண்டியன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறி யாளர்கள் பிரபு, கண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணியை தொடங்கி வைத்து பேசினர்.
விழிப்புணர்வு பேரணி வாணியம்பாடி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சப் கலெக்டர் அலுவலகம் வழியாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் அருகில் முடிவடைந்தது.
பேரணியில் உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணி, சந்தானம், உதவி பொறியாளர்கள், முகமது முஸ்தபா, சுதாகர், பி.சோமு, மனோஜ், உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
- 1 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து ெசன்றனர்
வேலூர்,
காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் சைக்காலஜி துறை, சமூகப் பணித் துறை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆக்ஸிலியம் கல்லூரி முதல்வர் ஜெயன்சாந்தி, சமூகப்பணித் துறைத் தலைவர் ஷர்மி அல்தாப், ஊடகத்துறை ராதிகா மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி ஆக்ஸிலியம் கல்லூரியில் இருந்து தொடங்கியது. டான் போஸ்கோ பள்ளி காட்பாடி வழியாக 1 கிலோமீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.
- இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
- இதில், 500-க்கும் மேற்பட்ட பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. ஆத்தூர் சாரதா ரவுண்டானாவில் தொடங்கி காமராஜர் சாலை, ரங்கசாமி தெரு, கடைவீதி, ராணிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக பேரணி நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் ஊர்வலமாக சென்றும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய மருத்துவ சங்க செயலாளர் கிருபா சங்கர், டாக்டர்கள் ஃபீலோ செல்விக்குமுதம், அருண் குமார், சுரேஷ் சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
- உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது.
- தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.
உடுமலை :
யோகா விழிப்புணர்வு பேரணியை முன்னாள் எம். எல். ஏ., இரா. ஜெய ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார் . துங்காவிஅரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய யோகா விழிப்புணர்வு பேரணியில் உடுமலை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை யோகா ஆசிரியர்கள் மற்றும் ஸ்ரீஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், மற்றும் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் பா. சிரஞ்சீவி நாட்டு நலப் பணித்திட்ட துணை அலுவலர் ம. மாலினி கலந்துஆகியோர் கொண்ட னர். இப்பேரணியானது உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது. பேரணியின் போது பொதுமக்களுக்கு யோகா விழிப்புணர்வு பற்றிய தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
மேலும் ஸ்ரீ ஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியின் கடந்த ஆண்டு நாட்டு நலப்பணிதிட்ட தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு களை எடுத்தும் தண்ணீர் ஊற்றியும் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் பொது அறிவு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து பிரசாரம் நடந்தது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் நேற்று காலை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, தலைமையாசிரியர் எம் ஆனந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போளூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செல்வதுரை, ஆசைத்தம்பி, சங்கீதா சிறப்பு கல்வியாளர்கள் விஜயலட்சுமி ஸ்டெல்லா பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஜேஆர்சி ஆலோசக ஆசிரியர் சந்திரநாதன் உள்பட மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதில் மாற்றுத்திறன் மாணவர்களையும் பள்ளியில் சேர விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கண்ணமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் திட கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் நடந்த இப்பேரணியில், முதுகலை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ரவி, தனபால், பட்டதாரி ஆசிரியர்கள் ராஜா, சதீஷ், திருஞானசம்பந்தம், உள்பட பேரூராட்சி (துப்புரவு) பணியாளர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- அலங்காநல்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மணியஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தலுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் ஜோசப் சகாயம், சுபா ஆகியோர் தலைமை தாங்கினர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் தேவி, மைவிழிசெல்வி, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியின் போது பொதுமக்களிடம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
- கோணகப்பாடி ஊராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளிசதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
தாரமங்கலம்:
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணகப்பாடி ஊராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளிசதீஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக துணைச்செயலாளர் சதீஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாயினி, அத்திகட்டானுர் அரசு தொடக்க பள்ளி தலைமைஆசிரியர் சாந்தி, நிரஞ்சனா, வார்டு உறுப்பினர்கள் சவிதா, லோகேஸ்வரி சின்னுசாமி, மேகலாதயாளன், செல்வி மாதேஷ், மணி மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற அலுவலத்தில் இருந்து ெதாடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளி வளாகத்தில் நிறைவு அடைந்தது.
- பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தூய்மை நடைபயணத்தை ஊராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
சூலூர்,
சூலூர் வட்டாரம், அரசூர் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார உறுதிமொழி மற்றும் தூய்மை நடைபயணம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சதீஷ்குமார் தொடங்கி வைத்து தூய்மை, கழிப்பறைகள் பயன்பாடு, குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், நெகிழி பை பயன்பாட்டிற்கு தடை குறித்து விளக்கினார். தூய்மை நடைபயணத்தை ஊராட்சித் தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோோர் ஆசிரியர் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், உன்னத் பாரத் அபியான் திட்ட மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலாளர் கணேசமூர்த்தி, பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நடைபயணம் அரசூர் ஊராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி சரவணம்பட்டி சாலை வழியாக கிழக்கு அரசூர் ஊருக்குள் வீடுகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் ஊராட்சி அலுவலகத்தில் முடிந்தது. ஊராட்சி துணைத்தலைவர் சுதா நன்றி தெரிவித்தார்
- உசிலம்பட்டி அருகே உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி செயலாளர் மகேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
- நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோயால் உலக அளவில் 30 கோடி பேரும், இந்திய அளவில் 6 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
உலக நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை அரசு மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை டீன் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ மனை செவிலியர், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நெஞ்சக பிரிவு தலைவர் டாக்டர். கிருஷ்ண மூர்த்தி பேசியதாவது:-
நாள்பட்ட மூச்சு குழாய் அடைப்பு நோயால் உலக அளவில் 30 கோடி பேரும், இந்திய அளவில் 6 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்று கூறி நோயின் அறிகுறிகள் மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் ஷியாம் மற்றும் டாக்டர்கள் மதன், ஜோசப் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
- பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது.
நெல்லை:
பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெற்றது.
அதற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணைமேயர் ராஜூ, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், ஒருங்கி ணைப்பாளர் சபேசன் மற்றும் பள்ளி கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களை குறிக்கும் வகையில் மக்களின் வாழ்வியல், நாகரீகம், தொழில் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் வேட மணிந்து பங்கேற்றுள்ளனர்.