search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayurvedic hospital"

    வில்லியனூரில் ஆயுர்வேத மருத்துவமனை இன்னும் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    வில்லியனூர்:

    மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் வில்லியனூர் தீயணைப்பு நிலையம் அருகே ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் ஆயுர் வேத மருத்துவமனை கட்டப்படுகிறது. இப்பணிக்கான பூமி பூஜை விழா இன்று காலை நடைபெறுகிறது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    தற்போது கிராம பகுதி மக்கள் அலோபதி மருத்துவம் மட்டுமல்லாமல் ஆயுர்வேதிக் மருத்துவத்தையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக நமது அரசு மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.8 கோடி செலவில் வில்லியனூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படுகிறது. 

    இது, வில்லியனூர் பகுதி மட்டும் அல்லாமல் மங்கலம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, உழவர் கரை போன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டப்படுகிறது. கிராம பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதுடன் மருந்து- மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், இந்திய மருத்துவ முறை ஆயுர்வேதிக் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன், கண்காணிப்பு பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கோவை ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 5 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். #OPanneerSelvam

    கோவை:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார்.

    விமான நிலையத்தில் இருந்து கணபதி காந்திமாநகரில் உள்ள தனியார் ஆயுர் வேத மருத்துவமனைக்கு சென்றார்.

    முதுகுவலிக்கு இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சேர்ந்துள்ளதாகவும், 5 நாட்கள் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற உள்ளதாகவும் அவரது பாதுகாவலர்கள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஆயுர் வைத்ய சாலையில் மூலிகை மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கேரள ஆயுர் வேத முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தற்போது முதுகுவலிக்காக கணபதியில் உள்ள இயற்கை வழி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அவர் பேட்டி அளிக்க வில்லை. நான் எனது சொந்த வி‌ஷயமாக வந்துள்ளேன் என கூறி விட்டு காரில் சென்றார். #OPanneerSelvam

    ×