என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ayyalur accident
நீங்கள் தேடியது "ayyalur accident"
அய்யலூர் அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே எரியோட்டில் இருந்து அய்யலூர் நோக்கி அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. வேங்கனூர் அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் பாகாநத்தம் சவுடகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 65). அவரது மனைவி சின்னத்தாய் (வயது 63) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், கார்த்திகேயன், ராமுத்தாய், ஆட்டோ டிரைவர் குமாரசாமி, உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகாண்டீபனிடம் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் இப்பகுதியில் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

×

X