என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ayyappan devotees"
+2
- கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்.
- பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை களை கட்டியது.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பன் சாமிக்கு பக்தர்கள் இருமுடி கட்டி கார்த்திகை முதல் தேதி முதல் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
இதைத்தொடர்ந்து இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் ஏராளமான தருமபுரி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தருமபுரியில் உள்ள சீனிவாசராவ் தெருவில் உள்ள ஐயப்ப கோவிலில் இன்று அதிகாலை பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோன்று கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், சாலை விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்.
இதன் காரணமாக தருமபுரியில் கடைவீதியில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் துளசி மாலை உள்ளிட்ட மாலை வகைகள், கருப்பு, நீல நிறங்களில் சட்டை, வேஷ்ட விற்பனையும் களை கட்டியது.
இதேபோன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
மண்டல விரதத்தை தொடங்குவதற்காக குருசாமியின் முன்னிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
இதேபோன்று இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிவார்கள். அதன்படி கிருஷ்ணகிரியில் ஐயப்பன் சுவாமி கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, மாலையணிந்து விரதத்தை துவக்கினார். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு மாலை அணிய கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
இதேபோன்று மாவட்டத்தில் ஓசூர், பர்கூர், சூளகிரி ஆகிய பகுதிகளிலும் ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
- சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர்.
கூடலூர்:
கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ள்ளது. கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள பூதநா ராயணன் கோவிலில் மாலை அணிந்து ெகாள்வது வழக்கம்.
ஆனால் வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர். அருவியில் நீராடுவதற்கு வனத்துறை யினர் தடைவிதித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுருளி அருவிக்கு நீராட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். இதுமட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். தற்போது மழை நின்றுவிட்டதால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்