search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "azad kashmir"

    • பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
    • கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்

    இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).

    ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.

    "பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.

    இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டது.
    • அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு இவ்வாறு குறிப்பிடுகிறது. இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கேள்விக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது தவறுதலாக ஏற்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விளக்க அறிக்கையுடன், இவ்விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும்படி மேற்கு வங்காள கல்வித்துறையை கேட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×