என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Azhagiya Koothar Temple"
- திருவிழா நாட்களில் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
- திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.
நெல்லை:
சிவபெருமான் திருநடனம் ஆடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆனித்திருமஞ்சன விழாவை முன்னிட்டு முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் ஆனி திருவிழாவின் தொடக்கமான கொடியேற்றுதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம், திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக வருகிற 2-ம் தேதி நடராஜர் தாமரை சபையிலிருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதியும், ஆனித் திருமஞ்சனம் 5-ம் தேதியும் நடைபெறுகிறது.