search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balalaya Puja"

    • ஐந்து நிலை ராஜகோபுரத்துக்கு வண்ணம் தீட்டும் வேலை நடைபெற்று வருகிறது.
    • சன்னதிகளின் விமானங்களுக்கு பாலாலய பூஜை நடக்கிறது.

    அவினாசி:

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பரிவார சன்னதிகளுக்கு,23ம் தேதி பாலாலயம் நடக்கிறது.கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள், பரிவார சன்னதி விமானங்களுக்கு பாலாலயம் நடைபெறுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கி, கருணாம்பிகை அம்மன் சன்னதியின் ஐந்து நிலை ராஜகோபுரத்துக்கு வண்ணம் தீட்டும் வேலை நடைபெற்று வருகிறது.

    பரிவார சன்னதிகளான செல்வவிநாயகர், வீரபத்ரர், பாதிரி மரத்து அம்மன், சிவசூரியன், தட்சிணா மூர்த்தி, கன்னிமூல கணபதி, பஞ்சபூ தலிங்கம், மகாலட்சுமி, செந்தில் ஆண்டவர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நடராஜர், பாலதண்டாயுதபாணி, நிருருதி விநாயகர், சண்டிகேஸ்வரி, துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகளின் விமானங்களுக்கு பாலாலய பூஜை நடக்கிறது. இதில், ஆதீன கர்த்தர்கள், அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோவில் பாலாலய பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது.

    வேலூர் பாலாஜி சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்திய பாலாலய பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆரணி நகர தலைவர் ஏ.சி. மணி, ஒன்றிய கவுன்சிலர் கீதாமோகன், கண்ண மங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, அத்திமலைப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர், அத்திமலைப்பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், இலக்கிய அணி செயலாளர் விண்ண மங்கலம் ரவி, ஆரணி ஒன்றிய செயலாளர் அக்ரா பாளையம் அன்பழகன் உள்பட கிராமமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினார்.

    ×