search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana Fiber"

    • நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
    • நாங்குநேரி அருகே ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் திருமதி வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது.

    வாழைக்குலை அறுவடை க்கு பின்னர் வீணாகும் வாழை மரத்தில் உள்ள வாழை நார் மூலம் அழகு சாதன பொருட்கள் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர், சுத்தமல்லி, மானூர் ஆகிய பகுதிகளில் 190 மகளிர் பணிபுரியும் விதமாக 3 வாழை நார் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக்குழுக்கள் வணிக நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளது. இந்நிலையில் நாங்குநேரி அருகே ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் திருமதி வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 50 சுய உதவி குழு பெண்களுக்கு முதல் கட்டமாக 45 நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் திருமதி வாழைநார் உற்பத்தி நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாழை நார் அழகு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

    ×