search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bandh in Kumari district"

    குமரி மாவட்டத்தில் பந்த் காரணமாக நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பஸ்கள் இயக்கப்படாடததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    நெல்லை:

    குமரி மாவட்டத்தில் பந்த் காரணமாக அங்கு பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லையில் இருந்து ஏராளமான பஸ்கள் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். நாகர்கோவில் பகுதியில் இருந்து நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோரும், கல்லூரி மாணவ-மாணவியரும் இந்த பஸ்களை பயன்படுத்தியே வருவது வழக்கம்.

    இதேபோல் நெல்லையில் இருந்து நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வேலை செய்வோர், கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் இந்த பஸ்களை நம்பியே உள்ளனர். பந்த் காரணமாக நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. ஊருக்கு திரும்ப முடியாமல் பயணிகள் தவித்தனர்.

    அரசு, தனியார் துறைகளில் பணிபுரிவோர் பஸ் ஓடாததால் திரும்பி சென்றனர். மேலும் பலர் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் பயணம் செய்தார்கள். இதனால் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை பஸ் நிலையத்தில் பயணிகள் சிலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    நெல்லை பஸ் நிலையத்தில் நகர்கோவில் பஸ்கள் செல்லும் பிளாட்பார்மில் எப்போது கூட்டம் அதிகமாக காணப்படும். பஸ்கள் ஓடாததால் பிளாட் பார்ம் வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் பயணிகள் தவித்தபடி நின்றனர். சில பஸ்கள் வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு விலக்குவரை இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம், ராதாபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடிக்கும் இன்று பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் டவுண் பஸ்கள் ஓடாததால் நெல்லை-குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். #tamilnews
    ×