search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank woman employee molestation"

    கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். #delhiwomanmolestation #bankwomanmolestation

    கும்பகோணம்:

    டெல்லியைச் சேர்ந்த 23 வயது வங்கி பெண் ஊழியர் கும்பகோணத்துக்கு பயிற்சிக்கு வந்த போது 4 பேர் கொண்ட போதை இளைஞர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.

    நள்ளிரவில் ரெயிலில் வந்து இறங்கிய அந்தப் பெண் ஓட்டலில் தங்கி இருந்த தோழியை ரெயில் நிலையத்துக்கு அழைத்தார். மழை பெய்ததால் ஆட்டோ பிடித்து ஓட்டலுக்கு வருமாறு கூறி விட்டனர். இதனால் டெல்லி பெண் அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினார்.

    டெல்லி பெண்ணுக்கு தமிழ் தெரியாததால் ஆட்டோ டிரைவர் வேறு பாதை வழியாக சென்று அலைக்க கழித்தார். இதனால் அந்தப் பெண் கூச்சல் போடவே நடுவழியில் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

    அதன் பிறகுதான் அவர் போதை கும்பலில் சிக்கினார். ஆட்டோ டிரைவர் மட்டும் அந்தப் பெண்ணை ஓட்டலில் கொண்டு போய் சேர்த்து இருந்தால் இந்த சம்பவமே நடந்து இருக்காது. இதனால் ரெயில் நிலையத்தில் டெல்லி பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


    கற்பழிப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த அட்டோ டிரைவர் மாயமாகி விட்டார். நேற்று கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டும் 100-க்கும் மேற்பட்ட டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களின் செல்போன் எண், ஆட்டோ எண், லைசென்ஸ் எண், வீட்டு முகவரி போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டனர்.

    2-ந்தேதி நள்ளிரவு ரெயில் நிலையத்துக்கு ஆட்டோ கூட்டிச் சென்றது யார் என்று அவர்களிடம் சரமாரி கேள்வி கேட்டு விசாரணை நடத்தினர்.

    மாயமான ஆட்டோ டிரைவர் வெளியூரைச் சேர்ந்தவரா? உள்ளூரில் ஆட்டோ ஓட்டுபவரா? இரவில் ஓட்டுவதால் உரிய லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுபவரா? என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.

    டெல்லி பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட அவர், பணம் கூட வாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று தப்பிச் சென்று விட்டார். எனவே அவரும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? கைதான வாலிபர்களுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடக்கிறது.

    முதன் முதலில் ஆட்டோவில் ஏறும்போது டிரைவரை டெல்லி பெண் நன்கு பார்த்து இருக்கிறார். அவரிடம் ஓட்டல் பெயரை ஆங்கிலத்தில் கூறி இருக்கிறார். இதனால் சில நிமிடங்கள் டிரைவரை டெல்லி பெண் பார்த்து இருக்கிறார். அவரால் ஆட்டோ டிரைவரை அடையாளம் காண முடியும்.

    எனவே சந்தேகப்படும் ஆட்டோ டிரைவர்களை பெண் முன் நிறுத்தி அடையாளம் காட்டச் சொல்லலாமா? என்றும் போலீசார் ரகசியமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    ஆட்டோ சென்ற பாதையில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் பல கேமிராக்கள் செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. கஜா புயலில் கண்காணிப்பு கேமிரா இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களில் புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோர் மருத்துவபரிசோதனைக்கு பின்னர் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு 19 வயதே ஆவதால் முதலில் அவர்கள் தஞ்சை சீர்நோக்கு சிறைக்கு அனுப்பபட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 2013-ம் ஆண்டு சட்ட திருத்ததின்படி அவர்கள் மேஜராக கருதுப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் கைதான வசந்த், தினேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பாபநாசம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது.

    தினேஷ் செல்போனில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கைதானவர்களிடம் வழக்கில் குற்றத்தை நிரூபிக்க தேவையான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள், போலீசார் ஒத்துழைப்புடன் நேற்று மேற்கொண்டனர். இதில் ஆண்மை பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    முன்னதாக பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட வங்கி பெண் ஊழியர், கும்பகோணம் பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். நீதிபதி, அவரிடம் தனி அறையில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.

    அதில் அவர் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அவற்றை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்து கொண்டார். #delhiwomanmolestation #bankwomanmolestation

    ×