search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beedi kattu"

    • ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 கைதிகளும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகளுக்கும், விசாரணை கைதிகளுக்கும் சிறைத்துறை சார்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சில கைதிகளின் பழக்க வழக்கத்தை பொறுத்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் பீடி கட்டுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்க்க வரும்போது அவர்களுக்கு தின்பண்டங்கள், பீடி உள்ளிட்டவை கொண்டு வந்து கொடுத்து வந்த நிலையில், அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டதன் காரணமாக மத்திய சிறைகளில் சிறைத்துறை சார்பில் சிறிய அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு பீடி உள்ளிட்டவை கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    பாளை மத்தியச்சிறையில் சுமார் 1,100 கைதிகள் விசாரணைக்காகவும், தண்டனை பெற்றும் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை கைதிகளில் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக பீடி வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 10 எண்ணம் கொண்ட பீடி கட்டு ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 2 கட்டுகள் மட்டும் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என்று சிறை வார்டன்கள் அங்கிருக்கும் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திடீரென்று பீடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் வாரத்திற்கு 2 பீடி கட்டுகள் தான் கொடுப்பீர்களா என்று கேட்டு மனம் உடைந்து போன 2 விசாரணை கைதிகள் நேற்று பாளை மத்திய சிறையில் தங்களது அறையில் இரும்பு துண்டு மூலம் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

    இதுகுறித்து அறிந்த சிறை வார்டன் உடனடியாக அந்த 2 கைதிகளையும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையை அறுத்துக்கொண்ட கைதிகள் பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்தையா, கோவில்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும், இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி, குமரியில் கடந்த 2022-ம் ஆண்டு வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஜூலை மாதம் முதல் பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×