என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Beedi Shop"
- சுப்பிரமணியபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
- விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறி பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் கிராமத்தில் தனியார் பீடி கம்பெனி இயங்கி வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான ராம சந்திரபட்டணம், வென்னியூர், சுப்பிரமணியபுரம், திருமலா புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பீடி கம்பெனி நிர்வாகம் விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறியும், தரமான பீடி இலைகள் மற்றும் தூள் வழங்கவில்லை என கூறியும் பெண்கள் கடையின் முன்பு திரண்டனர்.
சுமார் 1 மணி நேரமாக முற்றுகை போராட்டம் நீடித்த நிலையில் பீடி தொழிலாளர்களுடன் பீடி சங்க மாநில குழு உறுப்பினர் கற்பகவல்லி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மணிகண்டன், பீடி சங்க மாவட்ட தலைவர் குருசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் தங்கம், பீடிசங்க மாவட்ட செயலாளர் மகாவிஷ்ணு, ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.