search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhagwati Amman"

    • கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் ஸ்ரீ பண்டார அப்பிச்சி, பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வா கத்தினர் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் நான்கு கால பூஜைகள் கோவில் வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோவில் கோபுர கலசத்திற்கு யாக சாலை பூஜையில் இருந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., பவானி அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் பாட்டாளி தினேஷ்குமார் நாயகர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும்

    பவானி, காடையாம்பட்டி, சேர்வராயன் பாளையம், பெரியமோள பாளையம் சின்னமோள பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பண்டார அப்பச்சி, மலையாள பகவதி அம்மன் மற்றும் பல்வேறு வகையான முனிஸ்வர சுவாமிகள் என கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சாமிகளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    ×