என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bhavani Kuduthurai-Kodumudi"
- கர்நாடகா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
- மாசி மாத அமாவாசையை யொட்டி இன்று காலை கொடுமுடிக்கு பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர்.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இக்கோவில் பின் பகுதி யில் உள்ள இரட்டை விநா யகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என்றும், சிறந்த பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடை பெற்று வருகிறது. இதனால் இங்கு பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்வதால் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொது மக்கள் வருகிறார்கள். இதே போல் கர்நாடகா, ஆந்திர மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுகிறார்கள்.
மேலும் கூடுதுறையில் அமாவாசை, பவுர்ணமி, ஆடி பெருக்கு, ஆடி 18 மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட அதி களவில் பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை யொட்டி ஈரோடு, பவானி, அந்தியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலல் இருந்தும் சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கூடுதுறைக்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் நீராடி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்த னர். மேலும் எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகாரங்கள் செய்தனர். மேலும் பல பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கூடுதுறையில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
இதே போல் மாசி மாத அமாவாசையை யொட்டி இன்று காலை கொடுமுடிக்கு பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் திருமணமாகாத இளம் பெண்கள், வாலிப ர்களும் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்