search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam Park"

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
    • அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.
    • சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    இதை தொடர்ந்து குழந்தை களுடன் வந்து இருந்த அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடினர். மேலும் பெண்கள் பலர் சறுக்கு விளையாடி ஒருவருக்கொருவர் குதுகளித்தனர்.

    பவானிசாகருக்கு இன்று காலை குறைந்த அளவே மக்கள் வந்து இருந்தனர். ஆனால் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண ப்பட்டது.

    இைததொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் புல் தரைகளிலும் சிறுவர்கள் பலர் விளையாடினர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சலாடி குதுகளித்தனர். ெபாது மக்கள் அந்த பகுதி யில் இயற்கையை ரசித்து சென்றனர்.

    இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகையும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் அவர்கள் ருசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பூங்கா பகுதியில் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    ×