search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam"

    • நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக அதிகரித்து உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 907 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 80 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வந்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு 7 ஆயிரத்து 815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 6300 கனஅடி என மொத்தம் 7800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 6300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரத்துக்கும் மேலாக நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் தெங்குமரகடா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் அணையில் 104 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி ஆற்றில் அதிகபட்சமாக 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 104 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடியும், பவானி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.
    பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய்கள், காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், அந்தியூர், பவானி, ஈரோடு மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #Edappadipalaniswami
    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 101 அடியை தொட்டது. #BhavanisagarDam
    ஈரோடு:

    பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக மிதமாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது.

    இதையொட்டி இன்று காலை முதல் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று1230 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் மீண்டும் 101 அடியை தொட்டது. அணையின் நீர் கொள்ளளவு 105 அடியாகும்.

    அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். விவசாய பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #BhavanisagarDam
    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று அணைக்கு 1750 கனஅடி நீர் வந்த வண்ணம் இருந்தது. இன்று அது உயர்ந்து வினாடிக்கு அணைக்கு 5172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 99.01 அடியாக இருந்தது.

    ஏற்கெனவே இந்தாண்டு பவானிசாகர் அணை 2 தடவை நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் அணை குழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. இது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளதால் இந்தாண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டுக்கும் விவசாயத்துக்கு பஞ்சம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
    நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. மழை ஓய்ந்து படிப்படியாக அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 3100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டி இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4273 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நேற்று ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. கோபியில் 3 மி.மீ., தாளவாடி-1, சத்தியமங்கலம்-4, கவுந்தப்பாடி- 8.6, மொடக்குறிச்சி-4, சென்னிமலை-7, கொடிவேரி அணை-4, வரட்டுப்பள்ளம் அணை-1.2, மி.மீட்டர் மழை பெய்தது.
    பவானிசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #BhavanisagarDam
    ஈரோடு:

    கடந்த 5 ஆண்டுக்கு பிறகு பவானிசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது.

    தொடர்ந்து பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

    தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அதாவது 3100 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும், குடிநீருக்காக பவானி ஆற்றிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இன்று அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து வாய்க்கால்களில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாயிகள், விவசாயப் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தினமும் அணைக்கு கணிசமான அளவில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தும் உள்ளனர். #BhavanisagarDam
    பவானி ஆற்று தண்ணீரின் வேகம் குறைந்திருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் கொட்டிய மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருந்தது.

    இதனால் அணை கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிரம்பியது. வரலாறு காணாத வகையில் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் சீற்றம் ஏற்பட்டது. சத்தியமங்கலம், கோபி, கொடிவேரி, அரசூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பவானி கரையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

    இதனால் வெள்ளத்தால் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் யாவும் நனைந்து விட்டது. நேற்று முதல் இந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் காய வைத்து வருகிறார்கள்.

    மேலும் பல வீடுகளில் மாணவ-மாணவிகளின் புத்தகப் பைகளும், நோட்டு புத்தகங்களும் முழுவதும் நனைந்து விட்டன. இதையும் மாணவர்கள் காய வைத்து வருகிறார்கள்.

    எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

    70 ஆயிரம், 50 ஆயிரம், 40 ஆயிரம் கன அடி தண்ணீர் என பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 12700 ஆயிரம் கன அடி வீதம் மட்டும் திறந்து விடப்பட்டது.

    ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைந்தாலும் பவானி கரையோரப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நீலகிரியில் பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 100 கனஅடியை எட்டியது. #BhavanisagarDam
    ஈரோடு:

    தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதி எல்லையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

    நீலகிரியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 2 நாட்களாகவே பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை 10 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 928 கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று 100 அடியை எட்டியது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 850 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 450 கன அடியும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணையில் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும் சகதியும் நிறைந்தது. மீதி 115 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. #BhavanisagarDam
    நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டியதால் பவானிசாகர் அணை நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் வனப்பகுதி மலையடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மண்ணால் உருவாக்கப்பட்ட 2-வது பெரிய அணை ஆகும்.

    கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியது. தென்மேற்கு பருவமழை கொட்டியதால் அணையின் நீர்மட்டம் கிடு...கிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்தது. எனினும் சராசரியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6933 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலில் 850 கனஅடியும், காளிங்கராயன் வாய்க்காலுக்கு 450 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

    இதேபோல் பொது மக்களின் குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.27 அடியாக இருந்தது.
    விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலுக்கான பட்டனை அமுத்தி அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் இன்று தண்ணீர் திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகவும் அதன் மொத்த நீர் இருப்பு 32.80 டிஎம்சி ஆக உள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 3568 கனஅடியாகவும் அணையின் நீர்மட்ட உயரம் 97.70 அடியாகவும் அணையில் இருந்து நீர்திறப்பு 1500 கனஅடியாகவும் நீர் இருப்பு 26.96 டிஎம்சியாகவும் உள்ளது. அணை நிரம்புவதற்கு 8 அடி நீர்மட்டம் மட்டுமே போதுமானதாக உள்ளது.

    பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலுக்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதற்கான விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு அணையின் கால்வாய் மதகு பட்டனை அழுத்தி கீழ்பவானி திட்ட கால்வாய்க்கு தண்ணீரை திறந்துவிட்டனர்.

    அப்போது கால்வாய் மதகில் சீறிப்பாய்ந்து வந்த வெண்நிற நுரையுடன் கூடிய தண்ணீரில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றனர். அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முற்கட்டமாக 500 கனஅடியும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக 1000, 1500 2000 என உயர்ந்து அதிகபட்சமாக விநாடிக்கு 2300 கனஅடியாக திறந்து விடப்படும்.

    ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் திறப்பால் நெல் சாகுபடியும் காய்ந்து போன் தென்னை, வாழை காப்பாற்றப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ஏற்கனவே ஜூலை 12ம் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு ஆற்று மதகு மூலம் தினந்தோறும் விநாடிக்கு 1500 கனஅடிநீர் திறந்து விடுப்படுவதால் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளன.

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி மட்டுமே தண்ணீர் திறப்பு நடைபெறும். இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ள நிலையில் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் முன்கூட்டியே அணையில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 12-ந் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு தினந்தோறும் ஆற்று மதகு மூலம் விநாடிக்கு 1500 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு விநாடிக்கு 2300 கனஅடிநீரும் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு 1500 கனஅடிநீரும் என மொத்தம் விநாடிக்கு 3800 கனஅடிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்படும்.

    2006-ம் ஆண்டு பிறகு பவானிசாகர் அணை தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் தருவாயில் உள்ளது. அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்று மதகு மூலம் 8 மெகாவாட் மற்றும் கால்வாய் மூலம் 8 மெகாவாட் என மொத்தம் 16 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜா கிருஷ்ணன், சிவசுப்பிரமணி, தனியரசு, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×