என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bihar Cabinet"
- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். மாநிலக் கட்சிகள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் கவலையில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் தெரிவித்தார்.
- பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
சமீபத்தில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால் இந்தப் பணிகளை செய்துமுடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
- பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
- இந்நிலையில், பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை நடைபெறுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார்.
இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
இந்நிலையில், பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பெருமளவு நிதிஷ் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்