என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bike bus crash"
பல்லடம்:
பல்லடம் பொங்கலூர் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 48). பலகார வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (42). கணவன்- மனைவி இருவரும் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல புறப்பட்டனர். அதன்படி வீட்டில் இருந்து மொபட்டில் பல்லடம் பஸ் நிலையம் வந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மொபட்டை நிறுத்தினர்.
கோவை உறவினர் வீட்டுக்கு வந்த தம்பதி உறவினர்களை பார்த்து விட்டு இரவு பல்லடம் திரும்பினர். பஸ் நிலையத்தில் நிறுத்திய மொபட்டை எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
புறப்பட்ட சிறிது தூரத்தில் நால்ரோடு சிக்னல் உள்ளது. சிக்னலை கடக்கும் முன்பு சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே மொபட்டை வரதராஜ் நிறுத்தினார். அப்போது கோவையில் இருந்து கரூருக்கு அரசு பஸ் வந்தது. அப்போது அங்கு நின்ற மொபட் மீது பஸ் பின்னால் மோதியது. இதில் தம்பதி நிலைதடுமாறி விழுந்தனர். விழுந்து கிடந்த மகேஸ்வரி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகேஸ்வரிக்கு முதலுதவி சகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காரணம்பேட்டை அருகே வந்தபோது மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். லேசான காயங்களுடன் வரதராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான மகேஸ்வரிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 34). இவரது மனைவி வள்ளியம்மாள் என்ற சுசிலா (30). இவர்களுக்கு ஹர்ஷினி (8), விக்னேஷ்வரன் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் சிங்கை, அடையகருங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது நெல்லையில் இருந்து பாபநாசத்தை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இசக்கிராஜ், சுசிலா, ஹர்ஷினி, விக்னேஷ்வரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சிங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்