search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike race"

    • டெஸ்ட் ட்ரைவ் செய்யவேண்டும் என்று கூறி ஷோருமில் இருந்து பைக்கை இளைஞர் ஒருவர் திருடியுள்ளார்.
    • பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் இருந்து டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சாஹல் என்ற இளைஞர் நவம்பர் 3-ம் தேதி ரூ.1 லட்சம் விலையுள்ள செகண்ட் ஹேண்ட் ரேஸிங் பைக்கை வாங்குவதற்காக பைக் ஷோரூமிற்கு வந்துள்ளார். அப்போது தனது அப்பா என்றுகூறி ஒரு முதியவரை அவர் கூட்டி வந்துள்ளார்.

    பைக்கை வாங்குவதற்கு முன்பு டெஸ்ட் ட்ரைவ் செய்யவேண்டும் என்று கூறி தனது அப்பாவை ஷோரூம் ஊழியர்களிடம் விட்டுவிட்டு பைக்கை எடுத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சாஹல் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த முதியவர் நான் சாஹலின் தந்தை இல்லை என்றும் டீ விற்பவர் என்று கூறியுள்ளார்.

    சாஹல் அடிக்கடி தனது கடைக்கு டீ குடிக்க வருவார், ஒரு முக்கிய வேலையாக தன்னுடன் வரும்படி அவர் கூறியதாக ஊழியர்களிடம் அந்த முதியவர் தெரிவித்தார்.

    பின்னர் பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சாஹலை தீவிரமாக தேடிவந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடு போன பைக்கையும் போலீசார் கைப்பற்றினர்.

    சாஹலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "தனக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைமைகளால் பைக் வாங்க முடியவில்லை. ஆதலால் அதிவேக மோட்டார் சைக்கிளை திருடினேன்" என்று அவர் தெரிவித்தார்.

    • பைக்கில் சாகசம் செய்து வரும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது.
    • இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது சென்னையில் இயல்பாகிவிட்டது.

    ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

    பைக்கில் சாகசம் செய்து வரும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது. போலீசார் பேச்சு கேட்காமல் உள்ளவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதைதொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தான் செய்த பைக் சாகசத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போக்குவரத்தை விதிகளை மீறியும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் பைக் சாகசம் செய்துள்ளார்.

    ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    • ஆபத்தான “பைக்” ரேசில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்' களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பா லத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும், மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ் பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக மாற்றி வடிவமைத்தார். கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில் 40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல அதனை உருவாக்கினார். தொடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

    இந்த நிலையில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே தீவட்டிப்பட்டி வி.ஏ.ஒ. ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • நடைபாதை அருகே கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக பரங்கிமலை புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் நள்ளிரவில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மெரினா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தொழுகையை முடித்த பின்பு இளைஞர்கள் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனங்களில் சென்று பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனை தடுப்பதற்காக சென்னையில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சாலைகளில் கண்காணித்தனர்.

    அதன்படி நேற்று சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாலிபர்கள் பைக் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டதாக 33 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். 33 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர்.

    அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலந்தூர் சுரங்க பாதை அருகே 14 வயது சிறுவர்கள் 2 பேர் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக தாம்பரம் நோக்கி சென்று உள்ளனர்.

    அப்போது நடைபாதை அருகே கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் வாகனத்தை ஒட்டி வந்த ஆலந்தூரை சேர்ந்த 14 வயது சிறுவனின் தலை மெட்ரோ தூணில் மோதியது. சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுவனின் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.
    • மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை:

    காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையார் மலை, பூக்கடை வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு காணும் பொங்கலன்று பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரை மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு போன்ற பகுதிகளில் பைக் ரேசை தடுக்க 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் தனிப்படைகளாக அமைக்கப்பட்டு உள்ளன. பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    இதுதவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 40-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.

    • முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
    • ‘பைக்’ ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துணை கமிஷனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அபராதம்

    அவ்வழியாக வரும் வாகனங்களில் அரசு விதிமுறைகள்படி நம்பர் பிளேட்டுகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா?, அரசு விதிமுறைகள் படி வாகனங்கள் பயன்படுத்தப் படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் நம்பரை எழுதாமல் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

    இதேபோல் ஏர்- ஹாரன் உள்ளிட்டவைகள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதே போல் நடைபெற்று வரும் வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் முறையாக வைக்கப்படாத 250 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    துணை கமிஷனர் எச்சரிக்கை

    இந்த நிலையில் புத்தாண்டு தொடர்பாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை மாநகர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழா காலங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அதி கரிக்கப்படும். புத்தாண்டு அன்று 'பைக்' ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
    ராயபுரம்:

    சென்னை மெரினா கடற்கரை சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ‘பைக்ரேஸ்’ நடந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பைக்ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிக்கி உள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தன. அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ×