search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • அறந்தாங்கியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அறந்தாங்கி நகரத் தலைவர் சன் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன் முன்னிலை வகித்தார். அப்போது காந்தி பூங்கா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எல்என்புரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 120 பேருக்கு நோட்டு பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் முத்துக்குமாரசாமி.மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமையா, மாவட்டத் துணைத் தலைவர் முகமது மைதீன்,ராஜசேகர் விஜியா, பால்ராஜ் நாகூர்மீரா, அரசப்பன், சத்தியமூர்த்தி,பவித்ரா ராமநாதன்,ஜெயராஜ், ராமநாதன் ,இளையராஜா,பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. நகர, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் குருசாமி, கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் போட்டிகள் நடந்தன.
    • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் திருவுடப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

    பள்ளித் துணைத்தலைவர் பாஸ்கரன் பள்ளி பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச் செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர்-விழா அமைப்பாளர் முத்துசெல்வம் காமராஜ பிறந்த நாள் விழா போட்டிகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

    இந்த விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, நாடகப்போட்டி, குழு நடனம் மற்றும் ரங்கோலிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 46 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பொது அறிவு வினா கேட்கப்பட்டு உடன் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தினை உணர்த்தும் வண்ணம் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் இரட்டைமலை சீனிவாசனின் உருவபடத்தை திறந்து வைத்தார்.
    • மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார்.

    களக்காடு:

    களக்காட்டில் திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது காஸிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் இரட்டைமலை சீனிவாசனின் உருவபடத்தை திறந்து வைத்தார்.

    இதில் தொழிலபதிபர் சுபாஷ், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா, களக்காடு ஒன்றிய செயலாளர் இன்பரசு, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் மிக்கேல்ராஜ், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சரத்குமார், களக்காடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்த், களக்காடு ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகராணி, வள்ளியூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் வேலம்மாள், ராதாபுரம் மகளிரணி செயலாளர் முருகானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆனந்த சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். களக்காடு நகரச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர உங்களின் சாதனை நம்பிக்கையை அளிக்கிறது.
    • சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு முக்கிய தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இணையற்ற சாதனை, எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் ஏராளமான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கை அளிக்கிறது.

    எங்கள் சொந்த சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ராம்கோ முன்னாள் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ராஜபாளையத்தில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் ராம்கோ சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவின் 87-வதுபிறந்தநாள் விழா நடை பெற்றது. விழாவில் அன்னாரது நினைவிடத்தில் கீதாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, அவரது மகன் பி.வி. அபிநவ் ராமசுப்பிரமணி ராஜா மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதனைத்தொடர்ந்து அபிநவ வித்ய தீர்த்த பாரதி வேத பாடசாலையில் அமைந்துள்ள பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா திருஉருவச் சிலைக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னாரது ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார். நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ் டைல்ஸ் பிரிவு ஊழியர்கள் ஏந்தி சாரதாம்பாள் கோவிலில் இருந்து ராம மந்திரம் இல்ல வழியாக ராஜபாளையம் மில்ஸ் வளாகத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

    விழாவை முன்னிட்டு சஞ்சய் சுப்பிரமணியன் கர்நாடகா இசை நிகழ்ச்சியும், ஸ்ரீதேவி ந்ருத்யாலயா குழுவின் அகோபிலம் அகோபலம் நாட்டிய நாடகம் ராஜபாளையத்தில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
    • தெற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் நடந்தது

    திருப்பரங்குன்றம்,

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட காங்கி ரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். பகுதி தலைவர் நாகேஸ்வரன், அமைப்பு சாரா தொழிலாளர் பணியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன். மகாலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பூபதி பாண்டியன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், செல்வராஜ், சின்ன தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மார்ஷல் நேசமணி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • இந்த பிறந்த நாள் விழாவில், அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பகுதியிலுள்ள பெருந்தலை–வர் மக்கள் கட்சி அலுவ–லகத்தில் கன்னியா–குமரி மாவட்டத்தை தமிழ–கத்தோடு சேர்க்க போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட

    மார்ஷல் நேசமணியின் 127- வது பிறந்த நாள் நிகழ்ச்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது

    அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கதுரை, தென் மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்

    • சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு மறத்தமிழர்சேனை சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 221-வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

    மாநில துணை பொது செய லாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜவஹர்சிவா, மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்டசெயலாளர் முத்துகுமார், மூவேந்தர் முன்னேற்றகழக மாநில பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் கோட்டூர்சாமி வரவேற்றார். வாளுக்குவேலி உருவபடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகி மகேந்திரன், அ.ம.மு.க. நகர செயலாளர் மதன், சுகுமாறன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மூவேந்தர் முன்னேற்றகழக வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி, வழக்கறிஞர் விஜயக்குமார், லயன்ஸ் நகரதலைவர் பாலாஜி, நாம்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆனந்த், காங்கிரஸ் நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கச்சைகட்டி கிளை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • சிங்கம்புணரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோட்டைவேங்கைபட்டி அமைந்துள்ள சமத்துவபுரம் வீடுகளை வருகிற 8-ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்,

    அதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சமத்துவபுரம் முன்பகுதியில் மரக்கன்றுகளை அமுதா நட்டார். இந்தஆய்வின்போது அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் பெரியகருப்பன் அணிவித்தார். மேலும் அங்கு உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி முன்பு கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 199 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பாரதம் திட்டத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    இதில் சிங்கம்புணரி நகர்மன்ற சேர்மன் அம்பலமுத்து, துணைச் சேர்மன் செந்தில்குமார், செயல் அலுவலர் ஜான்முகமது ஞானிசெந்தில் மற்றும் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 10 சிக்சருடன் 83 ரன்கள் குவித்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்த மும்பை பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். #IPL2019 #Pollard
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த திரிலிங்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. இதில் லோகேஷ் ராகுலின் (100 ரன்) சதத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறியது. கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த சமயம் விசுவரூபம் எடுத்த மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் கீரன் பொல்லார்ட் ரன்மழை பொழிந்தார். அவரது அசுரத்தனமான மட்டையின் சுழற்சி, ஆட்டத்தை மும்பை அணியின் பக்கம் திருப்பியது. வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 4 ரன் தேவை என்ற நிலை வந்த போது பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டபோது அல்ஜாரி ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து மும்பை ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான்.

    ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிறப்பாக செயல்பட எனக்கு வலுவான சக்தியும், கடினமான கட்டத்தில் போராடும் துணிச்சலும் அளித்த கடவுளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்வது என்றாலே எனக்கு கொண்டாட்டம் தான். அதனால் தான் கொஞ்சம் முன்வரிசையில் இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் திரும்பவில்லை. அதனால் அஸ்வின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும், அவரது ஓவர்களில் மட்டும் 5-6 சிக்சர்கள் விளாசி ரன்ரேட் தேவையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை. இருப்பினும் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து பொறுமையுடன் செயல்பட வேண்டி இருந்தது. இந்த ஆடுகளம், பந்து வீச்சுக்கு கடினமானது. பேட்டிங்குக்கு எளிதானது. ஒவ்வொரு சிக்சரையும் அடிக்கும் போது உற்சாகம் பீறிட்டது. பந்தை ரசிகர்கள் பகுதிக்கு விரட்டுவதை பார்ப்பதே தனி சந்தோஷம் தான்.

    பஞ்சாப் அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் கடைசி 2-3 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு திட்டமிட்டபடி அமையவில்லை. நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். இங்கு, இந்த இலக்கை எட்ட முடியும் என்பது தெரியும். என்னை பொறுத்தவரை எந்த இலக்கை எட்டுவதும் சாத்தியமே என்று நம்பக்கூடியவன் நான். அதற்கு ஏற்ற வகையில் ‘பவர்-பிளே’யில் எங்களது பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். நானே இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்.

    மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் நாங்கள் 2 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் அவர் உடல்தகுதியுடன் இருப்பார். அவரிடம் கேப்டன்ஷிப்பை திரும்ப வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்குரிய இந்த ஆட்டநாயகன் விருதை என் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு பொல்லார்ட் கூறினார்.

    பொல்லார்ட்டிடம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உங்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதிலில், ‘வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் களத்தில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய குழப்பம் நிலவியது. அவர்கள் வைத்திருந்த விரும்பத்தகாத வீரர்களின் பட்டியலில் நானும் (2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை) ஒருவன். ஆனால் என்னை பொறுத்தவரை எப்போதும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்தாலும் அதிக ரன்கள் எடுக்கவே முயற்சிக்கிறேன்.

    சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேர்வு கமிட்டிக்கு புதிய தலைவர் வந்திருக்கிறார். அதனால் தேர்வு கமிட்டி என்ன செய்யப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும். எனக்கு இப்போது வயது 31. கிறிஸ் கெய்ல் 39 வயதிலும் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுகிறார். என்னாலும் இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். புதிய தேர்வு குழு இதை எல்லாம் கவனத்தில் கொள்வார்களா? என்பதை பார்ப்போம். உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கிறது’ என்றார்.

    தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘எங்களது பீல்டிங் மெச்சும்படி இல்லை. அனேகமாக நாங்கள் இன்னும் சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். இது வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே நினைத்தேன். ஆனால் இந்த மைதானத்தில் இவ்வளவு ஸ்கோரை வைத்து கொண்டும் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டது. 10-12 ஓவர் வரை எங்களது ரன்ரேட் 10 ரன்கள் வரை இருந்தது. அதன் பிறகு சில ஓவர்கள் ரன்வேகம் தளர்ந்தது. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். பொல்லார்ட்டின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் எங்களது வெற்றி வாய்ப்பை பறித்து விட்டார்’ என்றார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் முதுகுவலியால் அவதிப்படுவதாக கூறிய அஸ்வின், காயத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அடுத்த ஆட்டத்தில் கெய்ல் ஆடுவது சந்தேகம் தான். #IPL2019 #Pollard

    திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம், திருப்புலிவனத்தில் அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் பிரகாஷ்பாபு தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதேபோன்று உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நகர இளைஞரணி பொருளாளர் துரைபாபு தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, நுற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் உத்திரமேரூர் முன்னாள் தொகுதி செயலாளர் தர்மன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எம்.கே.பி. வேலு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபஞ்சாசரம், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, திருவந்தவார் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பால்வள தலைவர் வேலஞ்சேரி சந்திரன், நகர இணை செயலாளர் குமரேசன், துணை செயலாளர் உமாஇளங்கோவன், கிளைசெயலாளர் ஜீவானந்தம், இளைஞர் அணி செயலாளர் வேலு, சக்கரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பள்ளிப்பட்டு காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பி.ஜெயவேலு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். அதன் பிறகு 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ப்ரியாசுரேஷ், நகரச் செயலாளர் சண்முகம், கடன் சங்க துணைத்தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல், எளாவூர், கும்மிடிப்பூண்டி, பூவலம்பேடு, ஆரம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபால்நாயுடு, மு.க.சேகர், ஓடை.ராஜேந்திரன், கண்ணம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், பூவலம்பேடு கருணாகரன், கோட்டக்கரை ரவி, புதுகும்மிடிப்பூண்டி சுகுமார், இளங்கோ, கோவிந்தன், இமயம் மனோஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கும்மிடிப்பூண்டி பஜாரில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 2 ஆயிரம் பேருக்கு எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் அன்னதானம் வழங்கினார். இது தவிர பல்வேறு இடங்களில் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. கொடி ஏற்றப்பட்டது. 
    ×