என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bjp flag"
- பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் அருகே அரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடிகள், தொப்பிகளை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனை அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடசென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்களுக்காகவும் மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காக இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டது என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வருகிற 10-ந் தேதிக்குள் சிவகங்கை மாவட்டத்தில் 1000 பா.ஜ.க. கொடிகள் ஏற்றப்படும்.
- பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மேப்பல் சக்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு இந்தியா முழுவதற்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊழலற்ற அரசு என்ற பெயரினை மக்களிடம் பெற்றுள்ளது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையி லான அரசு அமைய உள்ளது.
இத்தகைய நல்லாட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசின் சாத னைகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் 1000 பா.ஜ.க. கொடிகள் புதிதாக ஏற்றப்படவேண்டும்.கொடிஏற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 1000 பா.ஜ.க. கொடிகள் மாவட்டம் நகரம் ஒன்றிய, பேரூர் பகுதிகளில் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பா.ஜ.கவினர் செய்துவருகிறார்கள்.இதில் பிரதமர் மோடியின் பாஜக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர்.
- 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அடு த்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தை கடந்த 22-ந் தேதி மர்மநபர்கள் சேதப்படுத்தி, பா.ஜ.க. கொடியை கிழித்தெறிந்தனர். மரக்காணம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஞானசேகரன் தலைமையி லான நிர்வாகிகள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடு க்க வேண்டுமென புகாரளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 30-ந்தேதி போராட்டம் நடத்த ப்படுமென நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
விருதுநகரில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு 60 அடி கம்பத்தில் ஏற்றப்பட்டு இருந்த கட்சிக்கொடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் கஜேந்திரன் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
எதற்காக தீ வைத்தனர்? அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தியாகராஜன் (வயது 21), அன்னை சிவகாசி நகரைச் சேர்ந்த மதன்குமார் (22) ஆகியோர் தான் கொடிக்கு தீ வைத்தனர் என்பது தெரியவரவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைதான மதன்குமார், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்