என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bleaching sewage"
- வெண்டிபாளையம்ரெயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாயில் பிளீச்சிங் கழிவுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறி வருகிறது
- இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோலார் அடுத்த வெண்டிபாளையம் ெரயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் செல்லும் கழிவுநீர் நேரிடையாக காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் வெண்டிபாளையம் மற்றும் மோளக் கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாயம் மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நாள்தோறும் வெள்ளை நிறத்தில் கால்வாய்களில் பாய்ந்தோடி வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பிளீச்சிங் தண்ணீர் வெள்ளையாக பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நின்று மூக்கை பொத்தி பிளீச்சிங் கழிவு நீரை வேடிக்கை பார்த்து செய்வதறியாது திகைத்து செல்கின்றனர்.
வெள்ளை நிறத்தில் பிளீச்சிங் கழிவுநீர் வெளியேறுவதால் தொற்று நோய்கள் மற்றும் புற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல நாட்களாக பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் பிளீச்சிங் கழிவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பிளீச்சிங் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டுபிடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் முறைகேடாக இயங்கும் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அப்பகுதியில் போராட்டம் நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.