என் மலர்
நீங்கள் தேடியது "blockade"
- நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
- கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலத்தில் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
- ரேசனில் தரம் குறைந்த அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதிப்பனூர் கிராமத்தில் சில மாதங்களாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்து வழங்குவதால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை வட்ட வழங்கல் அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்து திருமங்கலம் ஊராட்சி யூனியன் அலுவ லகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தரமான அரிசி வழங்கியதாகவும், தற்போது மட்டமான அரிசி வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
- பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டும் பணி நடைபெறுவதால் மாணவர்கள்-பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
- நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி சாலையோரம் உயரமான அளவில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டப்படுவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலையில் உள்ளனர்.
இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சா லைத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் மாணவர்கள் பணிகள் நடைபெறும் சாக்கடை கால்வாயில் ஏறி, இறங்கி பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலை தொடர்ந்தது.
இதை கண்டித்து இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள், மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை– போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பணம் கட்டிய ரசீதுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது.
தஞ்சையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.
அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை–யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கூறினர்.
இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளுமு பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தஞ்சையில் உள்ள அந்த கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பணம் கட்டிய ரசீதுடன் திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறு கூறினர்.
இது குறித்து பாதிக்கப்–பட்ட பொதுமக்கள் கூறும்–போது, ஏழை எளிய மக்களின் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றியுள்ளனர். ரூ.10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பலரும் ஏமாந்துள்ளனர்.
மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்று தர வேண்டும் என்றனர்.
- பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது.நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
- நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி
கடலூர்:
பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் கணேஷ், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் ஆகியோர் மீது நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் நேற்றிரவு மாநில அமைப்புச் தலைவர் பழ.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், கடலுார் சண்.முத்துகிருஷ்ணன், விருத்தாசலம் கார்த்திகேயன், மாணவரணி வழக்கறிஞர் கோபிநாத், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள விவரத்தை பா.ம.க.வினரிடம் தெரிவித்தார்.
இருப்பினும் போலீசார், தொடர்ந்து பா.ம.க.வினர் மீது வெறுப்புடன் நடந்து கொள்வதாக கூறி, கடந்த 20 தினங்களாக மாவட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மேற்கோள் காட்டினர். இச்சம்பவத்தால், மேலும் பிரச்சினைகள் ஏதும் நிகழாதவாறு போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிர்வாகிகள் வலியுறுத்தினர். விபத்து எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், எதிர்பாராத விதமாக நடந்தது எனவும், இதில் போலீசார் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிந்து உள்ளதால் ஏற்பட்ட பிரச்சினை என பா.ம.க.வினர் தெரிவித்தனர். தற்போது நடந்து வரும் விசாரணையை துரிதப்படுத்தி, யாரும் பாதிக்காத, சட்டரீதியிலான பாதுகாப்பு முறையில் நடவடிக்கை மேற்கொள்வதாக டி.எஸ்.பி. ராஜேந்திரன் உறுதி அளித்தார். அதன் பின்னர் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது
- லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
கடலூர்:
சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு,
- மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்:
ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் வர்த்தக பிரிவு எம்.டி.சுப்பிரமணி, பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி, மேகநாதன், வக்கீல் பிரிவு ரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பழனி, திருமுருகன் வசந்தம் சரவணன், மாநகர பொதுச்செயலாளர் கோபி குமரன், உடையாபட்டி பிரகாஷ், சுரேஷ் பாபு, மொட்டையாண்டி, ஓ.பி.சி பிரிவு பர்வேஷ், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார், சிவக்குமார், வரதராஜ், இளைஞரணி ராஜ்பாலாஜி, ரத்தினவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைவாசல்
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து இன்று காலை, சேலம் மாவட்டம், தலைவாசல் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரைய்யா, வட்டாரத் தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், ஜே.பி.கிருஷ்ணா, ஆட்டையாம்பட்டி சாமி, தங்கராஜ், அருள்ஆனந்தம்,
கண்ணன், ராமர், தன்ராஜ், சிவாஜி, சசிகுமார் குருசேவ், ரவிக்குமார், முருகேசன், அழகுவேல், நேதாஜி மணிமாறன், ராஜேஷ், வெள்ளையன், கிருஷ்ணன், நந்தினி, டைலர் கணேசன், ஜெய்ஆனந்த், மணிகண்டன், ஜெயபால், செல்வமுருகன், ஆத்தூர் சம்பத் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை அங்கிருந்த தடுப்பு கட்டையில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
கடலூர்:
பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றி வந்த லாரி, கடலூர் சாவடியில் உள்ள ஒரு தடுப்பு கட்டை யில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். திருக்கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சரவணன் (வயது 31) லாரி டிரைவர். நேற்று இரவு பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை கடலூர் சாவடியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தடுப்பு கட்டை யில் லாரி மோதி பலத்த சத்தத்துடன் சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்தன. மேலும் லாரியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் சாவடியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவ தால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை.
- பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பெள்ளேபாளையம் ஊராட்சி.
இதில் மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து இரும்பறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் நீரேற்று கிணற்றில் தண்ணீர் நிரப்பி அங்கு 3 அடுக்கு முறையில் தண்ணீரை சுத்திகரித்து அதன் பின் ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை என்றும், அருகே உள்ள குட்டை நீர் சிட்டேபாளையம் நீரேற்று நிலையத்தில் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து இன்று காலை பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளிகுப்பம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர் தென்பொன்முடி, எலகம்பாளைய,ம் வடபகத்தூர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை-அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் நித்யா திடீரென மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து இழுக்க முயற்சித்தார். இதனைப் பார்த்த சக பொதுமக்கள், இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மறியல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.
- பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
பல்லடம் :
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் 10-ம்வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்க மறுப்பதுடன், வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தர இயலாது என தலைமையாசிரியர் கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.
- 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா உல்லத்தி ஊராட்சியில் பன்னிபுரா, ஏக்குனி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் மலைவேடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். அப்போது பன்னிபுரா, ஏக்குனி பகுதி மலைவேடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஏக்குனி பள்ளிக்கூடத்தை காலை 10 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர்.
மேலும் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலை வேடர் இன மக்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பழனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மலை வேடர் இன மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 1999-ம் ஆண்டு வரை எங்களுக்கு இந்து மலைவேடர் பழங்குடியினர் என குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் அதன் பின்னர் 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்க வில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எங்களின் குழந்தைகள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் படித்து என்ன பயன். லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.
தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மலைவேடர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மலை வேடர் இன மக்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
- பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம்:
சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அங்கு பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.
இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்கள் மனு கொடுத்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக விரோதிகள் அட்டகாசம்
வாய்க்கால் பட்டறை அரசு பள்ளி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், மது குடிப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி வருகின்றனர்.
மேலும் கடந்த 8-ந் தேதி சிறுமி ஒருவரை தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். இதனால் தட்டி கேட்ட எங்கள் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே அப்பகுதியில் கஞ்சா, மது குடித்து ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கைது செய்து பொதுமக்களை அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.