search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood Test Result"

    • அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக ரத்த மாதிரி கொடுக்க செல்பவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை அங்கு நிலவி வருகிறது.
    • விரைவில் கணினி மூலமாக நோயாளிகளுக்கு பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் சுமார் 1,200 -க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் அறை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான நோயளிகளின் ரத்த மாதிரிகளை அவர்களது உறவினர்கள் எடுத்து சென்று பரிசோதனைக்கு கொடுப்பது வழக்கம்.

    ஆனால் அந்த அறையில் 2 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிவதால் பரிசோதனைக்காக ரத்த மாதிரி கொடுக்க செல்பவர்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை அங்கு நிலவி வருகிறது.

    அவ்வாறு நீண்ட வரிசையில் நின்று ரத்தம் வழங்கினாலும், பரிசோதனை முடிவுக்காக 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக நோயாளிகள், அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    அதேபோல் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியவர்களுக்கும் ரத்த பரிசோதனை முடிவு தாமதமாக வருவதால் அவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கமுடியாத சூழ்நிலையும் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதனால் ரத்தம் பரிசோதனை செய்வதற்கு கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, கூடுதலாக லேப் டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட நேரம் காத்து நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை மாலைமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

    இதன் எதிரொலியாக ரத்த பரிசோதனையை விரைவுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுப்ப தாக மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நெல்லை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மத்திய ரத்த ஆய்வகத்தில் முற்றிலும் தானியங்கியாக செயல்படும் ரத்த பரிசோ தனை கருவிகள் உள்ளன.

    இதன் மூலம் பெறப்படும் ரத்த மற்றும் நீர் மாதிரிகள் விரைவாக மிக குறைந்த நேரத்தில் பரிசோதிக்கப்பட்டு எவ்வித காலதாமதமின்றி வழங்கப்படுகின்றன.

    சில உயர்ந்த வகை பரிசோதனைகள் கல்லூரி நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, முடிவுகள் விரைவில் பெற்று வழங்கப்படுகின்றது.

    டெங்கு,கொேரானா பரிசோதனை முடிவுகள் சுமார் 3 மணி நேரத்தில் வழங்கப்படுகின்றன. இது தவிர தேவையற்ற காலதாமதம் ஏதும் ஏற்படாமலிருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    விரைவில் கணினி மூலமாக நோயாளிகளுக்கு பரிசோதனை முடிவுகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×