search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bloodthana Camp"

    • ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு விருதுநகர் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் 140 ரத்ததான முகாம் அமைப்பா ளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, தமிழ்நாட்டில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

    சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம்.எனவே, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×