search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blooming wild"

    • வனப்பகுதியில் காட்டு மல்லி பூ வழி நெடுக பூத்துக்குலுங்குகிறது.
    • மேலும் மல்லி பூவின் வாசம் ரம்மியாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. இந்த பெரிய மலையில் தான் 4 கிலோ மீட்டர் மலை வழி பயணம் செய்தால் மலை மீதுள்ள முருகன் கோவிலை அடையலாம்.

    வரலாற்று சிறப்பு மிக்க முருகனை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பலர் தங்களது குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக சென்னிமலை முருகனை தரிசித்து மலை அழகினை ரசித்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

    இந்த வனப்பகுதியில் தற்போது காட்டு மல்லி பூ வெள்ளை போர்வை போர்த்தியது போல் ஆங்காங்கே மலை பாதை வழி நெடுக பூத்துக்குலுங்குகிறது.

    மேலும் மல்லி பூவின் வாசம் ரம்மியாக உள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் இந்த பூக்கள் வெள்ளை வெள்ளையாக தெரிகிறது.

    இதை மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். காட்டு மல்லியின் வாசனை மிக நன்றாக தெரிகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு தான் ஏராளமான பூக்கள் பூத்து குலுங்கிறது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

    மழை இல்லை எனில் பூக்கள் உற்பத்தி இவ்வளவு இருக்காது. குறைந்த அளவில் பூக்கும். மழை பெய்ததால் ஒரு சேர அனைத்து மரங்களிலும் பூத்துள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ×