search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bolld Donate Camp"

    • திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததான பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • மேலும் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் எண்.1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.231(சுயநிதி பிரிவு) ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களின் ரத்தவகை கண்டறிதல் மற்றும் ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின. திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் நடந்த இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததான பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது மேற்பார்வையில் 10 மருத்துவ பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். மேலும் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்களும் தங்களின் ரத்தவகையை கண்டறிந்தனர்.

    இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பார்வதி தேவி, மாணவ செயலாளர்கள் சிவசிரி, ஜெயவினோத் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×