search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booth Agents Meeting"

    • கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
    • தி.மு.க. பாக முகவர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலநது கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் தேர்தல் பார்வையாளர் மதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், எட்டையாபுரம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர் உட்பட தி.மு.க. பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    ×