search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "border of Tamil Nadu"

    கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் செல்ல முடியாமல் சரக்கு லாரிகள் தமிழக எல்லையில் காத்து நிற்கின்றனர்.
    பொள்ளாச்சி:

    கனமழை தொடர்வதால் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை.

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கேரள மாநிலத்திற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வழியாக திருச்சூர் உள்ளிட்ட கேரளாவின் பிற மாவட்டங்களுக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பொள்ளாச்சி பகுதியில் இருந்து காய்கறி, மஞ்சி, தேங்காய் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளை நடுப்புணி, கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட எல்லை பகுதி சோதனை சாவடியிலே கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

    இதனால் லாரிகள் ரோட்டின் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. டிரைவர்கள், கிளீனர்கள் அவதியடைந்துள்ளனர். அவர்கள் லாரிகளில் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். பாலக்காடு வழியாக தலச்சேரி, காசர் கோடு, கண்ணூர் செல்லும் லாரிகள் மட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 10 லாரிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கேரள மற்றும் தமிழக எல்லையில் கோபாலபுரம் அருகே உள்ள முலத்தரா தடுப்பணை வழியாக கேரளாவுக்கு செல்கிறது.

    இந்த தடுப்பணையின் தடுப்பு சுவர் கடந்த 9-ந் தேதியன்று உடைந்தது. இந்த நிலையில் தற்போது ஆழியாறில் இருந்து அதிக பட்சமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆழியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்க முடியாக மூலத்தரா தடுப்பு அணையின் இரு பக்கத்திலும் நேற்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அணையில் ஆங்காங்கே தண்ணீரை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கான்கிரீட் சுவர்கள் அடித்து செல்லப்பட்டது.

    பொள்ளாச்சியில் இன்று காலையும் மழை பெய்தது. #tamilnews
    ×