என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bottles"
- மதுபான கடைக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டது.
- பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதுபானங்கள் கொண்டு சென்ற வாகனம் வேகத்தடையில் ஏறிய போது மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கீழே விழுந்தது.
அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலரும் மதுபானங்களை அள்ளிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுபான கடைக்கு மதுபானங்கள் அடங்கிய 110 பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் 30 பெட்டிகள் கீழே விழுந்துள்ளது.
மதுபானங்கள் கீழே விழுந்ததை கண்டுபிடித்த ஓட்டுநர் வாகனத்தை திருப்பி வருவதற்குள் பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
- அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு கெம்பளம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அந்த காரில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. தனராஜ் மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையிலான வாழவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் பெரிய கோவிலூரை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் என்பதும், இருவரும் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில்சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா தங்கவேலு மற்றும் போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மணி நகர் பஞ்சமுக ஆஞ்நேயர்கோவில் அருகில் புதுவை சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் ஏராளமான புதுவை மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.
- காலவதி ஆகும் வரை நோயாளி களுக்கு வழங்காமல் வைத்திருந்தார்களா?
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகே குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக விநியோகித்த 200-க்கும் மேற்பட்ட அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக் பாட்டில்கள் ஆயிரம் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன.
இந்த டானிக் ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.
இந்த நிலையில் அயர்ன் அன்ட போலிக் ஆசிட் சிரப் ஐ.பி டானிக் 8-ம் மாதம் காலாவதி உள்ளது.
இதனை குப்பை கிடங்கில் கொட்டியது யார்? காலவதி ஆகும் வரை நோயாளி களுக்கு வழங்காமல் வைத்திருந்தார்களா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மிகவும் முக்கியமான இந்த மருந்து பொருளை காலாவதியாகும் முன்னரே வேறு அரசு மருத்துவமனைக்கு கொடுத்திருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.
- மூடை மூடையா கட்டி திருடி சென்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொருசுபட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(வயது41) என்பவர் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்தனர்.
அங்கு கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணமில்லை. இதனால் அதிருப்தியடைந்த திருடர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை மூடை மூடையா கட்டி திருடி சென்றனர். மறுநாள் மதியம் மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தபோது சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணிக்கம் ஒத்தகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன மதுபாட்டில்களின் ரூ.21 ஆயிரம் ஆகும்.
- ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை.
- தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவற்றின் விவரம் வருமாறு:-
தஞ்சாவூர் அருகே உள்ள சின்ன புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி.
இவரது மனைவி ராணி (வயது 44).
இவர் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.
இதேபோல் குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (36) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரையும் போலீசார் கைது செய்தனர்.
- அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.
திருப்பூர்:
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணை துவங்கியுள்ளது. அதில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்ட சதி வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.விடுதிகள், கூரியர் சர்வீஸ்கள், வாகன பார்க்கிங் மையங்கள் என சந்தேகப்படும் விதமாக புதிய நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கும் வகையில் உரிய அறிவுரைகள் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதங்களுக்கு திட்டமிடும் நபர்கள் முக்கியமான எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் தவிர தனியாக பாட்டில், கேன் போன்றவற்றில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்த அறிவிப்பு பெட்ரோல் பங்க்குளில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.
- சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பாபு நேற்று இரவு செவ்வாய்பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் இரவு 11 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை எண் 2226-ல் உள்ள பார் திறந்து இருப்பது கண்டு உடனடியாக உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும் கடையில் இருந்த 4 பேரை பிடித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ராஜிவ் நகர் பகுதியில் மது விற்றவர் போலீசார் கைது செய்தனர்.
- இவரிடமிருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ராஜிவ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர், டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால், இப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, நேற்று குடியிருப்பு பகுதியில் வைத்து மது விற்பனை செய்த சுரேந்தரை, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சமூக ஆர்வலர் மஞ்சள் மாரிமுத்து கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
- ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் இதேப்போல் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி, காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சள் மாரிமுத்து. சமூக ஆர்வலரான இவர் கடந்த 6 மாதமாக காலி பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
மது பாட்டில்களை மது பிரியர்கள் பல்வேறு இடங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காவிரி ஆறு காலிங்கராயன் வாய்க்கால், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறது. சில சமயம் மது பாட்டில்கள் காலில் குத்தி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பணிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது.
காலி மதுபாட்டில்கள் மலைபோல் குவிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் எடுக்கும் திட்டத்தை எனது முயற்சியால் நடை முறை படுத்தி உள்ளனர். அதேப்போன்று ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் இதேப்போல் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இதேப்போல் அனைத்து வகையான உடைந்த பாட்டில்கள், கண்ணா டிகளை கிலோ ரூ.20-க்கு வாங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வருடத்திற்குள் அனைத்து உடைந்த பாட்டில்களையும் பெற்று விடலாம். இதனால் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்