search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bounce Infinity"

    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவிலும் அதன்பின் 9 நகரங்களில் இவை அமைக்கப்படுகிறது.


    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் விரைவில் பேட்டரி மாற்றும் மையங்களை (battery swapping station) கட்டமைக்க இருக்கிறது. இதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேட்டரி மாற்றும் மையங்கள் கட்டமைக்கப்பட உள்ளன. 

    பல கட்டங்களாக நிறுவப்பட இருக்கும் பேட்டரி மாற்றும் மையங்கள் முதலில் பெங்களூருவிலும், அதன்பின் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. ஸ்கூட்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பவுன்ஸ் ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அருகாமையில் உள்ள பேட்டரி மாற்றும் மையத்தை அறிந்து கொள்ளலாம். 

     பவுன்ஸ் இன்பினிட்டி

    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் E1-ஐ இரண்டு வேரியண்ட்களில் வழங்குகிறது. அதாவது ஒரு வேரியண்டில் பேட்டரியும் மற்றொரு வேரியண்டில் பேட்டரி இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாத ஸ்கூட்டர்களை வாங்கினால், பேட்டரி மாற்றும் மையங்களில் உள்ள பேட்டரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    இந்தியாவில் பவுன்ஸ் இன்பினிட்டி E1 மாடலை பேட்டரி இல்லாமல் வாங்கும் போது ரூ. 56 ஆயிரத்து 999 என்றும், பேட்டரியுடன் சேர்த்து வாங்கும் போது ரூ. 79 ஆயிரத்து 999 வரை செலுத்த வேண்டும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • முதற்கட்டமாக இந்த வசதி தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ் இன்பினிட்டி தனது E1 ஸ்கூட்டர் மாடல்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது. முதற்கட்டமாக தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புது டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்று (ஜூலை 22) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் ஸ்கூட்டரை வாங்குவோர், அதற்கான தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். பதிவு கட்டணம், அக்சஸீஸ் மற்றும் கூடுதல் சேவைக்கான கட்டணம் உள்ளிட்டவைகளை நேரடியாக டீலரிடம் தான் செலுத்த வேண்டும்.


    "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தை பல்வேறு புதுமைகளுக்கு வழிவகை செய்து இருக்கிறது. அந்த வகையில், நாங்கள் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகன தீர்வுகளை இன்பினிட்டி E1 மூலம் வழங்கி வருகிறோம். ஆன்லைன் விற்பனை மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகம் பல்வேறு எல்லைகளை கடந்து வாடிக்கையாளர்களை சென்றடையும். இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்."

    "எங்கள் வாகனங்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர் தேவைகளை சீராக பூர்த்தி செய்ய முடியும்," என பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான விவேகானந்த ஹலெகரெ தெரிவித்தார். 

    பவுன்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பவுன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இன்பினிட்டி பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பவுன்ஸ் இன்பினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் அறிமுக நிகழ்வை தொடர்ந்து துவங்க இருக்கிறது. வினியோகம் அடுத்த ஆண்டு துவங்குககிறது. புதிய பவுன்ஸ் இன்பினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     பவுன்ஸ் இன்பினிட்டி

    பவுன்ஸ் நிருவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைத்து இருக்கிறது. தென்னிந்தியாவில் மற்றொரு ஆலையை கட்டமைத்து உற்பத்தியை அதிகப்படுத்தவும் பவுன்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.
    ×