என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Break the Lock"
- கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே புலவர் நத்தம் கிருஷ்ணாபுரத்தில் சர்வ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
நேற்று தரிசனம் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர்.
கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
உண்டியல் கடந்த ஓராண்டாக எண்ணப்ப டாமல் இருந்ததால் அதில் பல ஆயிரம் பணம் இருக்கும் என தெரிகிறது.
இது பற்றிய புகாரின் பேரில், உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது:-
எங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
மின் மோட்டாரின் காப்பர் வயர்கள் அடிக்கடி திருடு போகிறது.தற்போது கோவில் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளைய டிக்கபட்டு உள்ளது.
தொடர் திருட்டு சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.