என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » brick kiln owner dies
நீங்கள் தேடியது "Brick Kiln owner dies"
கடையநல்லூரில் பைக் மீது மொபட் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி செங்கல் சூளை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பகசுந்தர விநாயகர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 51). இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது மொபட்டில் ரெயில்வே பீடர்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் மணி என்பவர் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பைக்- மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரியப்பன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மாரியப்பனுக்கு கண்ணம்மாள் என்ற மனைவி, 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

×

X