என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bride"
- மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர்.
- அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கிராமத்தில் மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடிப்போன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் 28 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். நண்பர்களாக இருந்தவர்கள் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர். 2 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்பிறகு மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.
ஜூன் 17ம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஜூன் 3-ம் தேதி மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடி போயுள்ளார்.
இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னெவென்றால், மணமகனின் தந்தைக்கு 10 குழந்தைகளும் மணமகனின் தாயுக்கு 6 குழந்தைகள் உள்ளனர் என்பது தான்.
எஸ்பி உத்தரவின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
- காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் அஞ்சலி (18) என்பவருக்கும் திலீப் (25) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
இதை பார்த்து கோவமான மணப்பெண் போலீசுக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திலீப், அவரது மூத்த சகோதரர் தீபக், அவரது மாமா மாதா பிரசாத் மற்றும் அவரது தந்தை ராம்கிரிபால் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உறவினர்கள் மற்றும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர். பின்னர் திருமண சடங்குகள் முடிக்கப்பட்டன.
- முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடைபெற்றது.
- உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி தம்பதிக்கு இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "ராதிகா, உங்கள் பிரகாசமான புன்னகை என்றும் மறையாது. ஆனந்த், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அதே அன்புடனும் கருணையுடனும் ராதிகாவைத் தொடர்ந்து அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். வாழ்த்துகள் விரைவில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
- மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான ‘சுப ஆசீர்வாத்’ நிகழ்ச்சி நடந்தது.
- பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து நேற்றும், இன்றும் திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள். திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முகேஷ் அம்பானி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
மேலும், 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா பச்சன் ஆகியோருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே போல நடிகர் ஷாருக்கான் தனது மனைவி, மகளுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப், வெங்கடேஷ், நடிகைகள் மாதுரி தீட்சித், ஹேமமாலினி, காஜல் அகர்வால், திஷா பதானி, ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் அட்லீ, தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியுடன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாக்கள் நிறைவு பெறுகின்றன.
- திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
- ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செஞ்சி:
திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.
செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.
ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
- போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
- இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.
இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.
இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.
இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-
அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
- 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.
இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.
இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.
இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.
எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.
தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.
இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.
இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.
தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.
"ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
- கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
- தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 27 சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி வயது 22 என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி சர்ச்சில் திருமணம் நடைபெற்றது, திருமணத்தின் போது 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
இது தொடர்பாக தாம்பரம் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்நிலையில் ஆர்த்தி தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் விக்னேஷ் உடன் வாழ பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுப்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம். இவரது மனைவி மஞ்சு (வயது20). இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணமானது.
கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அருகில் உள்ள மாமனார் வீட்டிற்கு மஞ்சு செல்வார். சம்பவத்தன்று மஞ்சு நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து மஞ்சு தனது மாமனாரிடம் கூறியுள்ளார். மா மனார் சுந்தரலிங்கத்திடம் தட்டி கேட்டார். அப்போது சுந்தரலிங்கம் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மாமனார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே விவகாரத்தில் கூடலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் முத்து, முருகன், முத்து முனி யாண்டி ஆகியோர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுந்தரலிங்கம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
- இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.
பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.
- ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).
இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்