என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "broker arrested"
- திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர்.
- போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.
விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார். வெங்காயத்தில் முதலீடு செய்தால் எந்த காலத்திலும் நஷ்டம் கிடையாது என தெரிவித்ததோடு 30 சதவீதம் அதிகமாக பணத்தை திருப்பி தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.
இதனை நம்பி சென்னை வளசரவாக்கம் தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் (40), சூர்யாவை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் செலுத்தினார்.
இதேபோல் திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் கூறியபடி பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் சூர்யாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து சென்னை சந்திரசேகர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சூர்யாவை கைது செய்தனர்.
திருப்பூர் செவந்தாம்பாளையம் சாமத் தோட்டத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்கதேச வாலிபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலி ஆதார் கார்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு கார்டு தயாரிக்க ரூ. 6 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்தது.
கைதான 8 பேரிடம் விசாரித்த போது திருப்பூரை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அவினாசியில் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வர்மா என்பவர் தான்போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள்.
இதனை தொடர்ந்து புரோக்கர் மற்றும் வர்மாவை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த வர்மா ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் புரோக்கர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்த போது திருப்பூரில் தங்கி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வர்மாதான் போலி ஆதார் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளை தயார் செய்து கொடுத்ததாக கூறினார்.
இதனை தொடர்ந்து வர்மாவை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையினர் ஜார்க்கண்ட் விரைந்துள்ளனர்.
வர்மாவை பிடித்து அவர் வைத்துள்ள கம்ப்யூட்டரை சோதனை செய்தால் தான் அவர் எத்தனை பேருக்கு போலியாக ஆதார், அடையாள அட்டை தயாரித்து கொடுத்தார் என்பது தெரிய வரும். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்