search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brooke Halliday"

    • புரூக் ஹாலிடே அரை சதம் விளாசினார். அவர் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
    • வங்கதேச தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீராங்கனைகளாக சுசி பேட்ஸ்- ஜார்ஜியா ப்ளிம்மர் களமிறங்கினர். சுசி பேட்ஸ் 4 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த லாரன் டவுன் 1, கேப்டன் சோஃபி டெவின் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மருடன் புரூக் ஹாலிடே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஜார்ஜியா ப்ளிம்மர் 39 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். மேடி கிரீன் 15, இசபெல்லா 25 என வெளியேறினர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் ஹாலிடே அரை சதம் விளாசினார். அவர் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×