search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building employee"

    பாகூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் புதிய காமராஜர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள கோவிந்தன் வேலை முடிந்து மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது அடிக்கடி முன் கோபம் ஏற்பட்டு கோபித்து கொள்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு கோவிந்தன் வீட்டில் சாப்பிட்டு விட்டு திடீரென மனைவியுடன் கோபித்து கொண்டார். பின்னர் கோவிந்தன் தனியாக தூங்க சென்றார். வழக்கம் போல் கணவன் கோபித்து செல்வதாக கோவிந்தம்மாள் எண்ணினார்.

    இன்று காலை 5 மணிக்கு கோவிந்தம்மாள் தூங்கி எழுந்து பார்த்த போது வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் கணவர் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து கோவிந்தன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பணத் தகராறில் கட்டிட தொழிலாளர்கள் மோதிக் கொண்டதில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள மணிநகர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49) கட்டிட தொழிலாளி. இவருடன் மேல வெள்ளமடத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வேலை பார்த்தார். இந்த நிலையில் ஜெயராஜ், நடராஜனுக்கு ரூ.4 ஆயிரம் கடன் கொடுத்தாராம். அதனை திருப்பி கொடுக்காததால் ஜெயராஜ் தனது மருமகன் இசக்கி முத்து என்பவருடன் சென்று பணத்தை கேட்டுள்ளார். 

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், இசக்கிமுத்து இருவரும் கம்பியால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நடராஜன் மீது வழக்குபதிவு செய்தார். 

    இதேபோல் நடராஜன் கொடுத்த புகாரில் ஜெயராஜிடம் வாங்கிய பணத்தை 2 மாதத்தில் தருவதாக கூறியிருந்தேன் அதனை அவர் கேட்காமல் என்னை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஜெயராஜ், இசக்கிமுத்து ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    ×