search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burning garbage"

    • கடலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே எரியும் குப்பையால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
    • நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் குவிந்து எரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதற்கு இடத்தை மும்முரமாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். இது மட்டும் இன்றி குப்பைகளை சரியான முறையில் அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றார். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் மலை போல் குவிந்து இருந்தன. இன்று காலை குப்பைகள் திடீரென்று எரிய தொடங்கியன. இதனை தொடர்ந்து தற்போது குப்பைகள் பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டது போல் கரும்புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகின்றது.

    இதன் காரணமாக சாலையில் செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களும், அவதிக்குள்ளாகி நோய் பரவும் அபாயமும் நிலவி வருகின்றது. இது மட்டுமின்றி சிலருக்கு குமட்டல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுவதால் தற்காலிகமாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்று உள்ளனர். மேலும் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த குப்பைகள் தற்போது கொழுந்து விட்டு எரிவதால் என்ன செய்ய வேண்டும் என புரியாமல் பொதுமக்கள் தவித்து வருவதையும் காண முடிகிறது. ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றப்படும் குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைவதால் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×