என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Camera fitment at"
- வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வந்துள்ளதை உறுதி செய்தனர்.
- தோட்டத்தில் சிறுத்தையை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமிராவை பொருத்தினர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் வெள்ளக்கரடு தோட்டம் பகுதியில் நஞ்சப்பன் (51) என்பவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அவர் 4 ஆடுகள் மற்றும் 5 மாடுகளை வளர்த்தும் வருகிறார்.
இவரது விவசாய தோட்டத்திற்கு அதிகாலை சுமார் 3 மணியளவில் வந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதாக நஞ்சப்பன் டி.என்.பாளையம் வனத் துறையினரிடம் தெரிவித்து உள்ளார்.
இந்த தகவலின் பேரில் நஞ்சப்பன் தோட்டத்திற்கு வந்த வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்தும், ரத்த தாரை அடையாளங்களை வைத்தும் சிறுத்தை வந்துள்ளதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து அவரது தோட்டத்தில் சிறுத்தையை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமிராவை வனத்துறையினர் பொருத்தினர்.
இந்த தகவல் பரவியதும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளதால் வனத் துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நஞ்சப்பன் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்றை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.