search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cameras are in use"

    • தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்யா ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் போதுமான அளவு கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    ஈரோடு, செப். 22-

    தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்யா ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நடைமேடை பகுதிகள், டிக்கெட் கவுண்டர் மற்றும் ரெயில்வே பணிமனை பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மால்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நடந்த ஆய்வில் ரெயில்வே துறையின் சொத்துகள், ஊழியர்களின் பணித்திறன் மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ரெயில்நிலைய நடைமேடைகள், காவிரி ரெயில்வே பாலம் மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் எந்திரங்கள், லோகோ பைலட்டுகளின் அறை உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது. ஆய்வில் அனைத்தும் திருப்திகரமாக இருந்தது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் போதுமான அளவு கண்காணிப்பு கேமிராக்கள் பயன்பாட்டில் உள்ளது. ரெயிலில் முன் பதிவு செய்தவர்கள் வராத நிலையில், அடுத்ததாக காத்திருப்போர் பட்டியிலில் உள்ள பயணிகளுக்கு, ஆன்லைன் மூலம் படுக்கை ஒதுக்கீடு செய்யும் எந்திரம் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கான 800 கையடக்க கருவிகள், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்முறையால் பயணி களுக்கு வெளிப்படைத் தன்மையுடன், படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து தரப்படுவதால், பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    பொதுவாக ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள் அறையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. பெண்களும் தற்போது லோகோ பைலட்களாக பணிபுரியும் நிலையில் அவர்களின் சிரமங்களை நாங்கள் உணர்ந்து ள்ளோம்.

    இந்நி லையில் சில இடங்களில் சோதனை அடிப்ப டையில் லோ கோ பைலட் அறையில் கழிப்பறை வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவை பயன்பாட்டுக்கு ஏற்றதாய் இல்லை என தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் இப்பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மேம்பாலம் கட்டுவது தொடர்பாக மாநில அரசு திட்டம் தீட்டி பரிந்துரைத்தால் ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×