என் மலர்
நீங்கள் தேடியது "cancelled"
- திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரெயில் ேசவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22627) ரெயில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையேயும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22628) ரெயில், திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையேயும் வரும் 4-ந் தேதி முதல் 9 மற்றும் 14 முதல் 17-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதே வேளையில், திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர்-திருச்சி இடையேயான 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
- பொறியியல் பணி நடைபெறுவதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு
கரூர்,
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம் லாலாபேட்டை குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் இடையே பொறியியல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளையும் நாளை மறுநாளும் (3, 4-ந்தேதி) நடக்கிறது. இதனால், மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சி செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06882) சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருச்சியில் இருந்து மாலை, 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06123) சேவையும், நாளையும், நாளை மறு நாளும் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலில் மீன்வளத்தை பாதுகாத்திட புதுவையில் கவர்னர் உத்தரவின்படி மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலான பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலைகள், இழுமடி வலைகள் கொண்டு விசைப்படகு மற்றும் எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் மீன்பிடி தடைக்கால உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் எந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் இழுவலைகள், இழுமடி வலைகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது புதுவை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.
கோவை,
கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.
இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- முசிறி அருகே பரபரப்பு கோவில் பூஜை ரத்து செய்யப்பட்டது
- காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஊர் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதில் எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சமுதாய மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்று சமூகப் பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 8 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் ஊருக்குள் குடியிருந்து வருகின்றனர். மற்றவர்கள் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் திரும்பினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு காரணமாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதல் திருமண ஜோடிகள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பூஜைகளிலும், வழிபாடுகளிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தை நாடினர்.அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற இந்த பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறும் போது,
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு இல்லை. மற்றவர்களைப் போன்று அவர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொள்ளலாம்.ஆனால் அவர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை. இதுதான் அங்குள்ள பிரச்சனையாக இருக்கிறது. இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முப் பூஜைக்கு காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களிடம் வரி வசூல் செய்து ஊர் வழக்கப்படி சில சடங்குகளை செய்து அதன் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கும் ஒரு தரப்பினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில் பாதை இணைப்பு பணி காரணமாக ஹவுரா, புவனேசுவர் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மதுரை
புவனேசுவர்- மஞ்சேசுவர் மற்றும் ஹரிதாஸ்பூர்-தன்மண்டல் ரெயில் நிலையங்களுக்கு இடையே 3-ம் ரெயில் பாதை இணைப்பு பணி நடைபெறுவதால் கன்னியாகுமரி-ஹவுரா-கன்னியாகுமரி மற்றும் ராமேசுவரம்-புவனேஷ்வர்-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஹவுரா-கன்னியாகுமரி செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.12665) ஆகஸ்ட் 21, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி-ஹவுரா செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.12666) ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
புவனேசுவர்-ராமேசுவரம் செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.20896) ஆகஸ்ட் 18,25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேசுவரம்-புவனேஷ்வர் செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.20895) ஆகஸ்ட் 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரி வித்துள்ளது.
- சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும்.
- இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
தஞ்சாவூர்:
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக சில ரெயில்கள் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போர்ட்) அதிவிரைவு ரெயிலானது (வண்டி எண்.12653) நாளை முதல் 3-ம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர்- மன்னார்குடி மன்னை விரைவு ரெயிலானது (வண்டி எண்.16179) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -மங்களூர் விரைவு ரெயிலானது (16159) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும்.
காரைக்குடி - சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது (12605, 12606) இன்று (செவ்வாய்க்கிழமை) தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்குப் புறப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடர் மழையால் நடைமேடைகளில் வெள்ளம் புகுந்தது.
சென்னை:
தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடர் மழையால் நடைமேடைகளில் வெள்ளம் புகுந்தது.
20605 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர், 22628 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி எக்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
20636 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். கொல்லம்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது.
நேற்று புறப்பட்ட எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக சென்று பாலக்காட்டில் நிறுத்தப்பட்டது.
16127 சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ், 22627 திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 16321 நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், 16846 நெல்லை ஈரோடு ஆகிய 4 ரெயில்கள் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
- கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள்ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை தொடர்ந்து கன்னியாகுமரியில் இன்று காலை "திடீர்"என்று கடல் உள்வாங்கியது. இதனால் கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களுமே நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும் பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. கன்னியா குமரி யில் கடல் "திடீர்"என்று உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல்போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில்காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கனவே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
- தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதுடன் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது. இதில் குன்னூர்-ஊட்டி மலைரெயில் வழித்தடத்தில் அருவங்காடு, கேத்தி ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் மரங்கள் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது. இதனால் அருவங்காடு வரை சென்ற மலை ரெயில் மீண்டும் வந்த வழியாக குன்னூருக்கு திரும்பியது.
தொடர்ந்து மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள், ஊட்டிக்கு அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த மலைரெயில் குன்னூர் வரை மட்டும் இயக்கப்பட்டது.
மலை ரெயில்பாதை வழித்தடத்தில் தண்டவாளங்களில் கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே குன்னூர்-ஊட்டி இடையே இன்று ஒரு நாள் மட்டும் மலை ரெயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலைரெயில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே, பயணிப்பதால் குகைகள், இயற்கை காட்சிகள், அருவிகளை பார்க்க முடியும் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க நீலகிரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்புவார்கள்.
உள்ளூர் பயணிகள் மட்டுமல்லாமல், இங்கு வரக்கூடிய வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் மழை நீடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு விடியவிடிய மழை பெய்தது.
இந்த மழைக்கு, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ஆடர்லி இடையே தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன.
அத்துடன் மண்சரிந்து தண்டவாளத்தில் கிடந்தது. இன்று காலை வழக்கம் போல மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் குன்னூரை நோக்கி புறப்பட்டது.
ஹில்குரோவ்-ஆடர்லி இடையே ரெயில் தண்டவாளத்தில் மரம் மற்றும் மண், பாறைகள் கிடந்தன. இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக மலைரெயிலை அதே இடத்தில் நிறுத்தி விட்டார். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில் டிரைவர் ரெயிலை பின்னோக்கி இயக்கி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என சுற்றுலா பயணிகள் ஆசையோடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.