search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis plant was imprisoned"

    • கடம்பூர் போலீசார் மொசல்மடுவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதி விவசாயி ஆண்டிசாமி கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிடப்பட்டு ள்ளதாகவும், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் கடம்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடம்பூர் போலீசார் மொசல்மடுவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாயி ஆண்டிசாமி (50) என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிட்டு ள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அதே பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மண்பானை மற்றும் பாத்திரங்களில் 60 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்த னர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆண்டிசாமி சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிட்டதும், சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 60 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் மரவள்ளி செடிகளுக்கு இடையே பயிரிடப்பட்ட 120 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து ஆண்டிசாமியை கைது செய்து கடம்பூர் போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×