search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car driver kidnapping"

    பணத்தகராறில் போரூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவரை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    போரூர்:

    போரூர் செந்தில் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார்.

    விக்னேஷ் நடவடிக்கை சரியில்லாததால் சில நாட்களுக்கு முன்பு அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் விக்னேஷ் கடனாக பெற்ற ரூ.ஆயிரத்தை கொடுத்து விட்டு ஒரிஜினல் லைசென்சு பெற்று செல்லுமாறு கூறி இருந்தனர்.

    நேற்று விமான நிலையம் அருகே வந்து லைசென்சை பெற்றுக்கொள்ளுமாறு விக்னேசிடம் கால்டாக்சி நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து விக்னேஷ் தனது சகோதரர் உதயகுமாருடன் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கும், கால் டாக்சி நிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த விக்னேஷ் ஊழியர்கள் வந்த காரின் சாவியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து கால்டாக்சி நிறுவன ஊழியர்கள் இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

    இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போரூர் போலீசாருக்கும், காவல் கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். தாம்பரம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த விக்னேசை மீட்டனர்.

    மேலும் கடத்தில் ஈடுபட்ட கால்டாக்சி ஊழியர்கள் மாரிமுத்து, கவுதம், பேசும் முருகன், சிவா, ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    தாம்பரத்தில் ரூ.2 லட்சம் கேட்டு கார் டிரைவர் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் சேலையூரை சேர்ந்தவர் முகமதுசபீர் (வயது 32). கார் டிரைவர்.

    இவர் திருமுல்லைவாயிலை சேர்ந்த சாமுவேல் எபினேசர் என்பவரின் காரை லீசுக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

    லீசுக்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை. மேலும் மாத தவணையும் செலுத்தாமல் ஏமாற்றி வந்தார். சாமுவெல் எபினேசர் பலமுறை கேட்டும் முகமதுசபீர் பணம் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவரை கடத்திச் சென்று பணம் பறிக்க முடிவு செய்தார். நேற்று இரவு சாமுவேல் எபினேசர், அவரது நண்பர்கள் வண்ணாரப்பேட்டை கணேசமூர்த்தி, திருமுல்லைவாயல் சரவணன், வேங்கைவாசல் அப்துல், சந்தோ‌ஷபுரம் முகமதுஅலி, ஜெயபிரகாஷ், கிழக்கு தாம்பரம் முகமது சகால் ஆகியோர் காரில் முகமதுசபீர் வீட்டுக்கு சென்றனர்.

    வீட்டில் இருந்த அவரை 7 பேரும் காரில் கடத்திச் சென்றனர். அத்துடன் லீசுக்கு விட்ட காரையும் எடுத்துச் சென்றனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் முகமது சபீரின் தாயாருக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் காரையும், 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். முகமது சபீரை மீட்டனர். 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×